கடலூர், அக்.29 – கடலூர் மாவட்ட ஆட்சியர் சிபி ஆதித்ய செந்தில்குமார் தலைமையில் விவசாயிகள் குறை கேட்பு கூட்டம் நடை பெற்றது. இதில் பங்கேற்ற தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தின் முன்னாள் மாநில இணைச் செயலாளர் கோ.மாதவன், 2023-24 ஆம் ஆண்டில் கரும்புக்கு ஊக்க தொகையாக ரூ.215 அறிவித்ததை வரவேற்கிறோம். அதை உடனே வழங்க நடவடிக்கை வேண்டும் என்றார். தொடர்ந்து பேசிய அவர், நெல்லிக் குப்பம் இஐடி பாரி சர்க்கரை ஆலை யில் 1 சதத்திற்கு மேல் கழிவு என்ற பெயரால் பிடித்த செய்த கழிவுத் தொகையை வழங்க வேண்டும் என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. இதை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கரும்பு ஆணை யர் உத்தரவை நடைமுறைப்படுத்த நட வடிக்கை எடுக்க வேண்டும் என்றும் வலி யுறுத்தினார். எனதிரிமங்கலம் - தளவானூர் தடுப்பணை சேதமடைந்து இரண்டு ஆண்டு களை கடந்தும் சீரமைக்கப்படாமல் உள்ளது. 2022-23 வறட்சியால் பாதிக்கப் பட்ட பயிர்களுக்கு இன்சூரன்ஸ் வழங்கப்படவில்லை. கிள்ளை பகுதியில் பாதிக்கப்பட்ட மணிலா பயிருக்கு இன்சூரன்ஸ் வழங்கவில்லை. அம்பிகா சர்க்கரை ஆலையில் விவ சாயிகள் பெயரில் வாங்கியுள்ள வங்கி கடன்கள் முழுமையாக ரத்து செய்து விவ சாயிகளுக்கு தடையில்லா (என்ஓசி) வழங்க வேண்டும். மாவட்டம் முழுவதும் காம்ப்ளக்ஸ், டிஏபி, யூரியா உரம் கிடைக்காமல் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தனியார் கடைகளில் பூச்சி மருந்து, களைக்கொல்லி மருந்து விலைகள் அதிகம் விற்கப்படுகிறது, திருத்துறையூர் சின்ன பேட்டை கிராமத்தில் சுடுகாடு பாதை அமைக்கப்பட வில்லை. விருத்தாசலம் எடையூர் - திட்டக்குடி நந்திமங்கலம் இடையே இணைப்பு பாலம் அமைக்காமல் உள்ளது என்றும் ஆட்சியர் மற்றும் அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தார். அண்ணாகிராமம் காந்தி, அக்கடவல்லி அருகே மலட்டாற்றின் குறுக்கே பாலம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏரிக்கரையில் உள்ள ஆக்கிரமிப்பை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார், மேல்புவனகிரி ரவி, சேத்தியாத்தோப்பு முதல் வடலூர் வரை உள்ள பின்னலூர், நெல்லிக்கொல்லை விவசாயிகள் கடந்த 4 ஆண்டுகளாக பயிர்களுக்கு காப்பீடு செய்து இதுவரை காப்பீடு தொகை வழங்கப்படவில்லை என்றார். தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் ஆர்.கே. சரவணன், குறிஞ்சிப்பாடி தாலுகாவில் கிழக்குப் பகுதி விவசாயிகள் பாசன ஆதாரமான பெருமாள் ஏரி சமீபத்தில் தூர்வாரப்பட்டது.முழுமை அடையாமல் தற்போது நீர் வரத்து உள்ளது. வரத்து வாய்க்கால் கான்கிரீட் கட்டுமானம் மூலம் இணைக்கப்பட வேண்டும். முடிக்கப்படாத தூர் வாரும் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும். பெருமாள் ஏரி பகுதியை விடுமுறை கால சுற்றுலா தலமாக மாற்றி அமைக்க வேண்டும். கடலூர் மாவட்டத்தில் என்எல்சிக்கு நிலம், வீடு, மனை கொடுத்து பாதிக்கப் பட்ட விவசாயிகளுக்கும், விவசாய தொழி லாளர்களுக்கு உரிய நிவாரணம், கருணை தொகை மற்றும் மாற்று இடம், வீடு உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக கடந்த 06.09.2024 அன்று கடலூர் மாவட்ட ஆட்சியர் தலைமையில் நடை பெற்ற முத்தரப்பு பேச்சு வார்த்தையில் முன் வைத்த மற்றும் ஏற்றுக்கொண்ட கோரிக்கைகளை நிறைவேற்றிட மாவட்ட நிர்வாகம் தலையிட்டு உடனடியாக தீர்வு காண நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்றார். இதற்கு பதில் அளித்த ஆட்சியர் சிபி ஆதித்யா செந்தில்குமார், விவசாயிகளின் கோரிக்கைகளையும் நிறைவேற்ற நட வடிக்கை எடுக்கப்படும் என்றார்.