திருவண்ணாமலை,ஏப்.30- இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் செங்கம் தாலுக்கா கமிட்டி சார்பில் நேருநகரில் புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாள் நாள் விழா கருத்தரங்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது. நிகழ்ச்சி துவங்குவதற்கு முன்பாக சமூக விரோதிகள், புரட்சியாளர் அம்பேத்கர் புகைப்படங்களை கிழித்தும், வாலிபர் சங்கத்தின் கொடிகளை சேதப்படுத்தி யும் அராஜகத்தில் ஈடுபட்டனர். அந்த குற்ற வாளிகளை கைது செய்ய வலியுறுத்தி, செங்கம், ஜவ்வாதுமலை சாலையில் மறியல் நடைபெற்றது. பின்னர், குற்றவாளியை கைது செய்வதாக காவல்துறை உறுதியளித்ததையடுத்து நேரு நகர் வீதியில் பேரணி மற்றும் கருத்தரங்கம் நடைபெற்றது.வாலிபர் சங்க மாநில துணை செயலாளர் எம்.கே.பழனி, ததீஒமு மாநில துணை பொதுச் செய லாளர் ப.செல்வன், மாநில முன்னாள் செயற்குழு உறுப்பினர் ஏ.லட்சுமணன் மாவட்ட செயலாளர் சி.எம். பிரகாஷ், தோழமை சங்க தலைவர்கள் கணபதி, காமராஜ், உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.