திருப்பெரும்புதூர் மக்களவை தொகுதியில் போட்டியிடும் திமுக வேட்பாளர் டி.ஆர்.பாலுவுக்கு கூட்டணி கட்சியினர் அம்பத்தூர் ஐசிஎப் காலனியில் வீடு வீடாகச் சென்று வாக்கு சேகரித்தனர். இதில் எஸ்.லெனின்சுந்தர், சின்னப்பன், ஏ.ராயப்பன், சதாசிவம், ஆனந்தன் (சிபிஎம்), அ.விஜயகுமார், ஆர்.துரைசாமி, கோபி, மனோகரன் (சிபிஐ), பார்த்தசாரதி, சண்முகம் (திமுக) உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.