districts

img

சென்னையில் இன்று முதல் அகில இந்திய ஹாக்கி

சென்னை, செப். 18- எம்சிசி- முருகப்பா தங்கக் கோப்பைக்கான 95-வது அகில இந்திய ஹாக்கி  போட்டி சென்னை எழும்பூ ரில் உள்ள மேயர் ராதா கிருஷ்ணன் ஸ்டேடியத்தில் வியாழன் (செப்.18) முதல்  29-ந்தேதி வரை நடை பெறுகிறது. இந்த போட்டியில் 10 அணிகள் களம் காணு கின்றன. அவை இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் நடப்பு சாம்பியன் இந்தியன் ரயில்வே, இந்திய  ராணுவம் (ரெட்), பாரத்  பெட்ரோலியம், மராட்டியம்,  தமிழ்நாடு ஆக்கி யூனிட்  ஆகிய அணிகளும் பி  பிரிவில் ஹாக்கி கர்நாடகா,  இந்தியன் ஆயில் கார்ப்பரே சன், என்.சி.ஓ.இ போபால், மத்திய தலைமை செயல கம், ஒடிசா ஆகிய அணி களும் இடம் பெற்றுள்ளன. ஒவ்வொரு அணியும் தங்கள் பிரிவில் உள்ள மற்ற அணிகளுடன் தலா  ஒரு முறை மோத வேண்டும்.  லீக் முடிவில் இரு பிரிவி லும் டாப்-2 இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு தகுதி பெறும். சாம்பியன் கோப்பையை வெல்லும் அணிக்கு ரூ.7 லட்சமும், 2-வது இடத்தை பிடிக்கும் அணிக்கு ரூ.5 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்க ப்படும். அரையிறுதியில் தோற்கும் அணிகளுக்கு தலா ரூ.50 ஆயிரம் வழங்கப் படும்.