districts

img

அனைத்து துறை ஓய்வூதியர்கள் தர்ணா

கடலூர்,ஆக.6 - கடலூரில் அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடு பட்டனர். நீதிமன்ற தீர்ப்புகளின் படி காப்பீடு திட்டத்தில் முழு செலவின தொகையையும் இன்சூரன்ஸ் நிறுவனம் வழங்கிட வேண்டும். நீண்ட காலம் நிலுவையில் உள்ள மருத்துவ செலவினத்தை திரும்ப வழங்க  கோரி அளிக்கப்பட்ட மனுவின் மீது தாமத மின்றி நடவடிக்கை எடுத்து தொகையை உடனே வழங்கிட வேண்டும். சர்க்கரை வியாதி, ரத்த அழுத்தம் போன்ற மருத்துவ  சிகிச்சைக்கும் இன்சூரன்ஸ் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கத்தினர்  தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு மாவட்ட தலை வர் என்.காசிநாதன் தலைமை தாங்கினார். மாவட்ட துணை தலைவர்கள் கருணாகரன், சிவபிரகாசம், கலியமூர்த்தி, பத்மநாபன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் கோ.பழனி கோரிக்கை விளக்க உரையாற்றினார். போராட்டத்தை தொடங்கி வைத்து அரசு போக்குவரத்து கழக ஓய்வு பெற்ற நல அமைப்பின் பொதுச் செயலாளர் ஜி. பாஸ்கரன் சிறப்புரை ஆற்றினார். அரசு  ஊழியர் சங்க மாவட்ட தலைவர் ரவிச்சந்தி ரன், மாவட்ட செயலாளர் ஹரி கிருஷ்ணன், நகராட்சி ஊழியர் சங்க தலைவர் ச.சிவராமன் ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர். இதில் பல்வேறு சங்கங்களில் மாவட்ட  நிர்வாகிகள் கோ.ஆதவன்,  கோ.சுந்தர மூர்த்தி, ஜி.சுகுமாறன், சி.ராமநாதன் உட்பட  பலர் பேசினர். மாநிலச் செயலாளர் ஆர்.மனோகரன் நிறைவுரையாற்றினார். நிறைவாக மாவட்ட பொருளாளர் குழந்தை வேலு நன்றி கூறினார். வேலூர் தமிழ்நாடுஅரசு அனைத்துத்துறை ஓய்வூதியர் சங்கம் சார்பாக வேலூர் மாவட்ட  ஆட்சியர் அலுவலகம் முன்பு  மாவட்டத் தலைவர் எம்.பன்னீர் செல்வம் தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் பா.ரவி கோரிக்கை  விளக்க உரையாற்றி துவக்கி வைத்தும், சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர்  பி.கிருஷ்ணமூர்த்தி நிறைவுரையாற்றினர். மாநகர தொழிற்சங்க கூட்ட மைப்பு கன்வீனர் சி.ஞானசேகரன், மாவட்ட  பொருளாளர் ஞானசேகரன் இணை செயலாளர் பி.நாராயணசாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.