சென்னை, டிச. 19 - சட்டவிரோதமாக செயல்படும் டூ வீலர் பைக் டாக்சியை தடை செய்ய கோரி வியாழனன்று (டிச.19) தலைமை செயலகம் நோக்கி அனைத்து தொழிற் சங்கங்கள் சார்பில் பேரணி நடை பெற்றது. மெட்ரோ ரயில், மினி பஸ், டூவீலர் பைக் டாக்சி போன்றவை ஆட்டோ சவாரியை குறைத்து விட்டன. ஓலா, உபேர், ரேபிடோ போன்ற கார்ப்பரேட் நிறுவனங்கள் ஆட்டோ தொழிலை கபளீகரம் செய்கின்றன. இதனால் ஓட்டுநர்கள் பெரும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். 2013ஆம் ஆண்டிற்கு பிறகு கடந்த 11 ஆண்டுகளாக மீட்டர் கட்டணம் மாற்றி அமைக்கப்படாமல் உள்ளது. 2022ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மீட்டர் கட்ட ணத்தை உயர்த்த உயர் நீதிமன்றம் உத்தரவிட்டும் அரசு அமல்படுத்தாமல் உள்ளது. இந்நிலையில் கடந்த டிச.10 அன்று பல்வேறு கோரிக்கைகளை வலி யுறுத்தி 16 தொழிற்சங்கங்கள் இணைந்து சைதாப்பேட்டையில் போராட்டம் நடத்தியது. இதனை யொட்டி சங்கங்களுடன் பேச்சு வார்த்தை நடத்திய போக்குவரத்து ஆணையர், பைக் டாக்சி மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். ஆனால், அமைச்சர் சிவசங்கரன் பைக் டாக்சி மீது நட வடிக்கை எடுக்கப்படாது என்று அறி வித்தார். மோட்டார் வாகன சட்டம் 1989-ன் படி இருசக்கர வாகனம் பொது போக்குவரத்துக்கு பயன்படுத்த கூடாது. எனவே சட்டத்திற்கு புறம்பாக இயங்கும் பைக் டாக்சிகளை தில்லி, மகாராஷ்டிரா, கர்நாடகா அரசுகளைப் போல தமிழகத்திலும் தடை செய்ய வேண்டும். ஆன்லைன் அபராதத்திலி ருந்து ஆட்டோக்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும், உயர்நீதிமன்ற உத்தரவுப்படி மீட்டர் கட்டணம் உயர்த்த வேண்டும், அரசே ஆட்டோ செயலியை தாமதமின்றி தொடங்க வேண்டும், புதிய மோட்டார் வாகன சட்ட அமலாக்கத்தை கைவிட வேண்டும், புதிய ஆட்டோக்களுக்கு ரூ.10 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்ற தேர்தல் வாக்குறுதியை நிறை வேற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி புதுப் பேட்டை பழைய சித்ரா திரையரங்கிலி ருந்து ஊர்வலம் தொடங்கியது. இந்த ஊர்வலத்தில் சிஐடியு மாநிலச் செயலாளர் எஸ்.கே.மகேந்திரன், மு.சம்பத் (ஏஐடியுசி), கே.பேரறிவா ளன் (எல்எல்எப்), இரா.அந்தரிதாஸ் (எம்எல்எப்), பி.வேணுராம் (டிஎம்டி எஸ்பி), பி.சுலைமான் (எஸ்டிடியு) உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். பேரணியின் நிறைவாக தலைமை செயலகத்தில் முதலமைச்சர் அலுவல கத்தில் தலைவர்கள் மனு அளித்தனர்.
சட்டத்தை மீறி செயல்படும் அமைச்சர்
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அனைத்து ஆட்டோ சங்கங் களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் எஸ்.பாலசுப்பிரமணியம், “நீதி மன்ற தடையை மீறி டூவீலர் பைக் டாக்சி இயக்கப்படுகிறது. துறை ஆணை யர்களும் நீதிமன்றத்தில், டூவீலர் பைக் டாக்சியை தடை செய்ய வேண்டும் என்று கோரியுள்ளனர். இதனையொட்டி துறை ஆணையர் பிறப்பித்த தடை உத்தரவை அமைச்சர் ரத்து செய்துள்ளார். சட்டத்திற்கு புறம்பாக அமைச்சர் செயல்படக் கூடாது. 5 லட்சம் ஆட்டோ ஓட்டுநர்களின் வாழ்வாதாரத்தை பாது காக்க முன்வர வேண்டும்” என்றார்.