சென்னை, ஜூலை 20 - காப்பீட்டு பாலிசிகளுக்கு விதிக்கப்படும் ஜிஎஸ்டி-யை ரத்து செய்ய நாடாளுமன்றத்தில் குரல் எழுப்ப கோரி, நாடாளுமன்ற உறுப்பி னர்களை சந்தித்து அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காப்பீட்டு நிறுவனங்கள் வழங்கும் பாலிசிகளுக்கு ஒன்றிய அரசு 18 விழுக்காடு ஜிஎஸ்டி வசூலித்து வரு கிறது. இதை கைவிட வலியுறுத்தி நாடு முழுவதும் மக்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர். அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கமும் இதற்கான தொடர் இயக்கங்களை நடத்தி வருகிறது. இதனை பரிசீலித்து உரிய பரிந்துரைகளை வழங்க கோரி ஒன்றிய அரசு, நாடாளுமன்ற நிலை குழுவிற்கு அனுப்பியது. நிலைக்குழு பரிசீலனை செய்து, ஜிஎஸ்டியை குறைக்க பரிந்துரை செய்துள்ளது. இந்த நிலையில், காப்பீட்டு பாலிசி களுக்கான ஜிஎஸ்டி-யை முழுமை யாக நீக்க வலியுறுத்தி நாடாளுமன்ற உறுப்பினர்களை சந்தித்து வலி யுறுத்தும் இயக்கத்தை அகில இந்திய இன்சூரன்ஸ் ஊழியர் சங்கம் தொடங்கியுள்ளது. இதன் ஒருபகுதியாக நாடாளு மன்ற உறுப்பினர்கள் தொல்.திரு மாவளவன், என்.ஆர்.இளங்கோ, ஜி.கே.வாசன் உள்ளிட்டோரை சந்தித்து, சங்கத்தின் சென்னை கோட்டம்-1ன் தலைவர் கிரதர், பொதுச்செயலாளர் எஸ்.ரமேஷ் குமார் உள்ளிட்டோர் மனு அளித்து பேசினர்.