கனமழை காரணமாக பயணிகள் வசதிக்காக கூடுதல் மெட்ரோ ரயில்சேவை இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது. போக்குவரத்து தேவையை பூர்த்தி செய்யும் வகையில் அக்டோபர் 15, 16 மற்றும் 17 ஆகிய நாட்களில் கூடுதல் ரயில்சேவை இயக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. அதன்படி, காலை 5 மணி முதல் இரவு 11 மணி வரை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது மேலும், காலை 8 மணி முதல் 11 மணி வரை பச்சை வழித்தடத்தில் 5 நிமிட இடை வெளியில், நீல வழித்தடத்தில் 6 நிமிட இடைவெளியில் ரயில்கள் இயக்கப்படு கிறது. வண்ணாரப்பேட்டை முதல் ஆலந்தூர் வரை 3 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில் சேவை இயக்கப்படும் என அறிவித்துள்ளது. எச்சரிக்கை சென்னையில் கனமழை பெய்யும் என்பதால் முன்னெச்சரிக்கை நடவடிக் கைகள் தொடர்பாக விமான நிறுவனங்க ளுக்கு, விமான நிலைய அதிகாரிகள் அறி வுறுத்தியுள்ளனர். அதன்படி, ஓடுபாதை மற்றும் அதை சுற்றியுள்ள இடங்களில் மழைநீர் தேங்காத படி தடுப்பு நடவடிக்கை கள் எடுக்கும்படி கூறியுள்ளனர்.விமான சேவையில் மாற்றம் இருப்பின், உடனடி யாக பயணிகளுக்கு தகவல் தெரிவிக்க அறிவுறுத்தியுள்ளனர். விமான சேவை குறித்த தகவல்களை, அந்தந்த நிறுவன இணைய தளத்தில் உறுதி செய்து கொள்ள பயணிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விமான சேவைகளில் பெரிய மாற்றம் இருப்பின் சமூக வலைத்தளம் வழியாக தகவல்கள் வழங்கப்படும் என்று விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.