districts

img

சதுரங்கப் போட்டியில் சாதனை

சென்னை, ஜன.29- சென்னை ஏ.எம் ஜெயின் கல்லூரியில் ரங்கா சாய் செஸ் அகாடமி சார்பில் சமீபத்தில் நடைபெற்ற மாநில அளவிலான முதல் சதுரங்கப் போட்டிகளில் 8 வயதுக்கு உட்பட்ட ஜூனியர் பிரிவில் 6-இல் 5 ரவுண்டுகளில் ஜெரோன் தேவ் வெற்றி பெற்று 6-ஆவது இடத்தைப் பிடித்துச் சிறப்புக் கோப்பை வென்றுள்ளார் இரண்டாம் வகுப்பு மாணவரான இவர், கீ-போர்டு வாசிப்பதிலும் ஆர்வத்தோடு பயிற்சி எடுத்து வருகிறார். எல்ஐசி ஊழியர் கூட்டுறவு வங்கி ஊழியர் சங்கப் பொதுச் செயலாளர் கோபியின் மகனான ஜெரோன் தேவுக்கு, போட்டிகளின் முடிவில் பரிசும் சான்றிதழும் வழங்கப்பட்டது.