districts

img

நந்தன் கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்துக விவசாயிகள் சங்க விழுப்புரம் மாவட்ட மாநாடு வலியுறுத்தல்

விழுப்புரம், ஆக. 19- நந்தன் கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்த வேண்டும் என தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் 24ஆவது மாவட்ட மாநாடு மாவட்டத் தலை வர் பி.சிவராமன் தலைமையில் கண்டாச்சி புரத்தில் வெள்ளிக்கிழமை (ஆக. 19) நடைபெற்றது. மாவட்ட துணைத் தலைவர் கே.மாதவன் சங்க கொடியை ஏற்றினார், மாவட்டக் குழு உறுப்பினர் ஏ.நாகராஜன் அஞ்சலி தீர்மானத்தை வாசித்தார், மாநில துணைச்செயலாளர் ஏ.வி.ஸ்டாலின் மணி மாநாட்டை துவக்கி வைத்து  பேசினார். மாவட்டச் செயலாளர் ஆர்.டி.முருகன் வேலை அறிக்கையையும், பொருளாளர் பி.சவுந்தரராஜன் வரவு செலவு  அறிக்கையையும் சமர்ப்பித்தனர். சிபிஎம் மாவட்டச் செயலாளர் என்.சுப்பிர மணியன், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் மாநிலச் செயலாளர் எஸ்.வேல்மாறன், அகில இந்திய விவசாயத் தொழிலாளர் சங்கத்தின் மாவட்டச் செய லாளர் கே.சுந்தரமூர்த்தி, மாநிலக் குழு  உறுப்பினர் ஆர்.தாண்டவராயன் ஆகியோர்  வாழ்த்திப் பேசினர்.  மாநில பொதுச்செயலாளர் பெ.சண்மு கம் மாநாட்டை நிறைவு செய்து பேசினார். முன்னதாக வரவேற்பு குழு செயலாளர் எஸ்.கணபதி வரவேற்றார், மாவட்ட துணைச் செயலாளர் எழில்ராஜா நன்றி கூறினார்.
தீர்மானங்கள்
விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச விலை நிர்ணயம் செய்ய புதிய சட்டம் இயற்ற வேண்டும், விழுப்புரம்,  திருவண்ணாமலை ஆகிய இரு மாவட்டங் கள் பயன் பெறும் வகையில் கிடப்பில் போடப்பட்ட நந்தன் கால்வாய் திட்டத்தை துரிதப்படுத்தி முடிக்க வேண்டும், உரம்,  பூச்சி மருந்து, உழவர் கருவிகள் உள்ளிட்ட  இடுபொருட்களின் விலையை கட்டுப் படுத்தி, விவசாயத்திற்கு தொடர்ந்து மானியம் வழங்க வேண்டும், மாவட்டத்தில் வேளாண், கால்நடை கல்லூரிகளை அமைக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
நிர்வாகிகள்
மாவட்டத் தலைவராக ஆர்.தாண்ட வராயன், செயலாளராக ஆர்.டி.முருகன்,  பொருளாளராக பி.சிவராமன் ஆகியோர்  புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர்.

;