திருப்பத்தூர் தாலுகா மாநாடு தீர்மானம் திருப்பத்தூர், அக். 3 - மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பத்தூர் தாலுகா மாநாடு ஜி.ரவி, வி.சிங்காரம், முருகம்மாள் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்டச் செயலாளர் எஸ்.தயாநிதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். தாலுகா செயலாளர் மு.காசி வேலை அறிக்கையையும், சி.கேசவன் நிதிநிலை அறிக்கையை சமர்ப்பித்தனர். மாவட்ட செயற்குழு உறுப்பினர் கே.சாமிநாதன் வாழ்த்திப் பேசினார். மாவட்ட செயற்குழு உறுப்பினர் பி.காத்தவராயன் மாநாட்டை நிறைவு செய்து பேசி னார். இம்மாநாட்டில், புதுப்பேட்டை சாலையில் உள்ள ரயில்வே பாலத்தை போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் மேம்பாலம் அமைத்து தர வேண்டும், டிஎம்சி காலனியில் பல ஆண்டுகளாக வசிக்கும் அருந்ததியர் மக்களின் வீடுகளுக்கு பட்டா வழங்க வேண்டும், திருப்பத்தூர் நகரின் அனைத்து வார்டுகளிலும் சாலை மற்றும் கழிவுநீர் கால்வாய்களை சீரமைக்க வேண்டும், மலையோரம் உள்ள சிங்கம்பாளையம் கிராமத்தில் தடுப்பணை அமைத்து மழைநீரை சேமிக்க வேண்டும், கோடியூர் சந்தை பகுதி ஏரிநீர்பிடிப்பு பகுதியில் உள்ளதால் மாற்று இடம் ஒதுக்கி தர வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. வட்டக்குழு தேர்வு 9 பேர் கொண்ட திருப்பத்தூர் வட்டக்குழு குழுவின் செயலாளராக எஸ்.காமராஜ் தேர்வு செய்யப்பட்டார்.