districts

பக்ரீத் சென்னைக்கு வந்த 70 ஆயிரம் ஆடுகள்

சென்னை,ஜூன் 21-

    பக்ரீத் பண்டிகையை முன்னிட்டு சென்னைக்கு 50 ஆயிரத்தில் இருந்து 70 ஆயிரம் ஆடுகள் வரை விற்பனைக்காக கொண்டுவரப்பட்டுள்ளது.  

    இது தொடர்பாக தமிழ்நாடு அனைத்து இறைச்சி வியாபாரிகள் மற்றும் தொழிலாளர்கள்  சங்க நிர்வாகி ராயபுரம் அலி கூறும்போது, “இந்த ஆண்டு பக்ரீத்துக்காக வருகிற 23-ந்தேதி மாலையில் இருந்தே ஆடுகள் விற்பனைக்காக வர இருக்கிறது. ஆந்திர மாநிலத்தில் இருந்து அதிக அளவில் ஆடுகள் விற்பனைக்காக வருகின்றன. ரூ.15 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரம் வரையில் ஆடுகள் தரத்துக்கு ஏற்ப விலை போகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தென் மாநிலங்களை சேர்ந்த ஆடுகளுக்கு பக்ரீத் பண்டிகையையொட்டி தேவை இருக்கும் அந்த வகையில் இந்த ஆண்டும் கொம்பு வைத்த ஆடுகளே வர வழைக்கப்படுகின்றன. சென்னையில் ரெட்டேரி சந்தை, புளியந்தோப்பு, ஆட்டு தொட்டி, தாம்பரம் சந்தை, வில்லிவாக்கம் சந்தை உள்ளிட்ட இடங்களில் ஆடுகள் விற்பனை நடைபெற உள்ளது.