districts

img

ஊரப்பாக்கம் அருகே 7 அடி முதலை

செங்கல்பட்டு, நவ. 22- ஊரப்பாக்கம் அருகே அருங்கால் கிராமத்தில் ஏரியிலி ருந்து தப்பித்து விவசாய நிலத்திற்கு புகுந்த 7 அடி முதலை யால் பரபரப்பு ஏற்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், ஊரப்பாக்கம் அடுத்த கீரப்பாக்கம் ஊராட்சிக்கு உட்பட்ட பெரிய அருங்கால் கிரா மத்தில் காட்டாங்குளத்தூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட யூனியன் ஏரி 65 ஏக்கர் நிலப்பரப்பு கொண்டது. இந்த ஏரியிலிருந்து நள்ளிரவு 2 மணி அளவில் 7 அடி முதலை ஒன்று ஊரப்பாக்கம் -நல்லம்பாக்கம் சாலையை கடந்து அருகில் உள்ள விவ சாய நிலத்திற்குள் புகுந்தது. இதனை அந்த வழியாக வந்த வர்கள் தாம்பரம் வனத்துறையினருக்கு தகவல் கொடுத்த னர். தகவல் அறிந்ததும் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு  விரைந்து வந்து தப்பித்து செல்லாத வகையில் முதலையை கட்டிப்போட்டுவிட்டு கிண்டி சிறுவர் பூங்கா மற்றும் வண்ட லூர் உயிரியல் பூங்கா நிர்வாகத்தினருக்கு தகவல் கொடுத்து விட்டு சென்றனர். இதனால் அச்சமடைந்த கிராம மக்கள் மற்றும் பள்ளி மாணவர்கள் அந்த முதலையை காண திரண்ட னர்.