districts

img

507 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்

சென்னை,  மார்ச் 30- சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள க்ளீனிகிள்ஸ் குளோபல் மருத்துவமனையில் 504 சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக முடிக்கப்பட்டுள்ளன. இதில் 22 பேர்  குழந்தைகள்,  பெரியவர்கள் 482 பேர். பெரியவர்களில் 156 பேர் பெண்களாவர். இதற்கான  விழாவில்  தமிழ்நாடு அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் தென்காசி எஸ்.ஜவஹர், சிறுநீரக மாற்று சிகிச்சை நன்கொடையாளர்கள் மற்றும் பெறுநர்களுடன் கொண்டாட்டத்தில் கலந்து கொண்டார். சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்குப் பிறகு தங்கள் வாழ்க்கை எப்படி இயல்பு நிலைக்குத் திரும்பியது என்பதைப் பற்றி பங்கேற்பாளர்கள் இதில்  பேசினர்.  500க்கும் மேற்பட்ட சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைகள்  செய்திருப்பது குறிப்பிடத்தக்கது என்று மருத்துவமனையின் தலைமை நிர்வாக அதிகாரி டாக்டர் அலோக் குல்லார் கூறினார். மக்கள் விருப்பத்துடன் தானம் செய்ய முன்வரும்போது மட்டுமே இது சாத்தியமாகும். இன்று தானம் பெறுபவரின் குடும்பத்தினரும் உறவினர்களும் மட்டுமே முதலில் தானம் செய்கிறார்கள் என்று சிறுநீரகவியல் பிரிவு மூத்த ஆலோசகர் மருத்துவர் முருகானந்தம் கூறினார்.

;