districts

புதுச்சேரியில் கள்ளச் சாராயம் விற்ற 5 பேர் கைது

புதுச்சேரி,மே.28- புதுச்சேரி அடுத்த கிருமாம்பாக்கம் பகுதியில் கள்ளச்சாரா யம் பரவலாக விற்கப்படுவதாக காவல்துறைக்கு ரகசியத்  தகவல் வந்தது. அதன்பேரில் கிருமாம்பாக்கம் காவல்துறை யினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஈச்சங்காடு என்ற கிராமத்தில் சாராயம் விற்றுக்கொண்டிருந்த செந்தில்  (45) என்பவரை கைது செய்தனர். பின்னர் அவர் அளித்த தகவலின் பேரில், அவரது வீட்டின்  பின்புறத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 32 லிட்டர் சாரா யத்தை காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 27 ஆயிரம் ரூபாய் என்று கூறப்படுகிறது. மேலும் செந்தில் இடம் இருந்து ரூபாய். 8,800 ரொக்கம் மற்றும் விற்பனைக்கு பயன்படுத்தப்பட்ட மோட்டார் பைக்கையும் காவல் துறையினர் பறிமுதல் செய்தனர். திருபுவனை அதேபோல் திருபுவனை பகுதியில் தொடர்ந்து கள்ளச்  சாராய விற்பனை செய்துவந்த ராஜி (35) வயது என்பவரை காவல் துறையினர் கைது செய்து, அவரிடமிருந்து 140 லிட்டர்  எரிசாராயத்தை பறிமுதல் செய்தனர். கரையாம்புத்தூர் கரையாம்புத்தூர் அடுத்துள்ள மணல்மேடு பகுதியில் சாராயம் விற்ற மணமேடு மாரியம்மன் கோவில் தெருவைச்  சேர்ந்த சுந்தரமூர்த்தி (37), நெல்லிக்குப்பம் இளையராஜா (40), மணமேடு எம்.எஸ்.நகரை சேர்ந்த சுதாகர் (42) ஆகிய  3 பேரை கைது செய்து, அவர்களிடம் இருந்து 69 லிட்டர்  சாராயம் மற்றும் 32 ஆயிரம் ரூபாயை பறிமுதல் செய்த னர்.

;