சென்னை,மார்ச் 15- சென்னை கோடம்பாக் கம்-தாம்பரம் ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடை பெற்று வருவதால் ஞாயிற் றுக்கிழமை (மார்ச் 17) 44 புறநகர் மின்சார ரயில்கள் ரத்துசெய்யப்படுவதாக சென்னை கோட்ட ரயில்வே அறிவித்துள்ளது. பராமரிப்பு பணிகள் காரணமாக ஞாயிற்றுக் கிழமை சென்னை கடற் கரையில் இருந்து காலை 10.30 மணி முதல் மாலை 4.30 மணி வரை தாம்பரம் செல்லும் மின்சார ரயில்கள் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. அதே போல, தாம்பரத்தில் இருந்து காலை 10.05 மணி முதல் மாலை 4.30 மணி வரை சென்னை கடற்கரை வரும் மின்சார ரயில்களும் ரத்து செய்யப்படுகிறது என ரயில்வே தெரிவித்துள்ளது. தொடர்ந்து 4 வாரங்கள் மின்சார ரயில்கள் ரத்து செய்யப்பட்ட நிலையில் கடந்த வாரம் ரயில்கள் ரத்துசெய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.