districts

4 வழிச்சாலை விரிவாக்க பணிக்கு எதிர்ப்பு

திருவள்ளுர்,ஆக.1-

     பொன்னேரியை அடுத்த சின்னக்காவனம், பெரிய காவனம் பகுதியில் புதுவாயல்-பழவேற்காடு இடையே உள்ள 4 கிலோ மீட்டர் தூரம் 4 வழி சாலை யாக விரிவாக்க திட்டப்பணி நடைபெற்று வருகிறது.  

     இந்த சாலையில் பெரிய காவனம் ரயில்வே கேட் முதல் சின்னக்காவனம் வரை சாலையின் இருபுறமும் 100-க்கு மேற்பட்ட வீடுகள்  பாதிக்கப்படும் நிலை உள்ளது. இந்த விரி வாக்கப்பணிக்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.