districts

img

சென்னையில் ரூ.39 கோடியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மாபெரும் கட்டிடம் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

சென்னை,டிச.3  உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையம் மற்றும் கிண்டியில் உள்ள  ஐடிசி  கிராண்ட் சோழா ஓட்டல் நிறுவனம்  இணைந்து நடத்திய வேலை வாய்ப்பு முகாமில் தேர்வான மாற்றுத்திறனாளிகளுக்கு பணி ஆணைகளை சனிக்கிழமை மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் சனிக்கிழஐமயன்று (டிச.3) வழங்கினார்.  பின்னர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:  தேசிய வாழ்வாதார சேவை  மையமும் ஐடிசி நிர்வாகமும் ஒருங்கி ணைந்து 15 நபர்களுக்கான வேலைவாய்ப்பு அளித்திருப்பது  மகிழ்ச்சிக்குரிய ஒன்றாகும். ஏற்கெனவே பல தொழில்  நிறுவனங்கள் மாற்றுத்திறனாளி களுக்கு வேலைவாய்ப்புகள் வழங்கப்பட்டு இருந்தாலும் அவர்கள் வாழ்வாதாரத்திற்கு கஷ்டப்படும் நிலையில் இல்லை என்கின்ற  நிலையை எட்டவேண்டும். அதற்காக அரசாங்கமும் பல்வேறு  நடவடிக்கைகளை எடுத்துவரும் நிலையில் தனியார் தொழில்நிறு வனங்களும் கூட மனிதாபிமான அடிப்படையில் இதில் ஒருங்கி ணைய வேண்டும். மருத்துவம் மற்றும் மக்கள்நல் வாழ்வுத்துறையின் சார்பில் சென்னை அசோக்நகர் அருகே ரூ.39  கோடி மதிப்பீட்டில் மாற்றுத் திறனாளிகளுக்கென்று மாபெரும் கட்டிடம் கட்டும்பணி முடிவடையும் தருவாயில் இருக்கின்றது. இறுதிக் கட்டப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அந்தக்கட்டிடத் தில் மாற்றுத்திறனாளிகளுக்கென்று செயற்கை உபகரணங்கள், கை கால் போன்ற உபகரணங்களை தயாரிக்கும் பணிகளும், திறன் மேம்பாட்டு பயிற்சி, மாற்றுத் திறனாளிகளுக்கு அடையாள அட்டை வழங்குதல் போன்ற பல்வேறு பணிகளை செய்கின்ற தலைமையகமாக அந்த அலுவலகம் செயல்படும். அந்த அலுவலகம் இன்னும் 15 நாட்களில் முதலமைச்சர் அக்கட்டிடத்தை திறந்துவைக்க உள்ளார். இந்நிகழ்வில் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர்  ப. செந்தில்குமார், மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய வாழ்வாதார சேவை மையத்தின் துணை இயக்குநர் .சங்கீதா பற்கு ணன், ஐடிசி பொதுமேலாளர் சுபின்  சோன்கட்பாலா மற்றும் உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

;