districts

img

புதுப்பொலிவு பெறும் 388 அம்மா உணவகங்கள்

சென்னை,ஆக.3- சென்னை மாநகராட்சி கூட்டத்தில் அம்மா  உணவகங்களை சீரமைக்க ரூ.7 கோடியே 6 லட்சம் நிதி ஒதுக்கி தீர்மானம் நிறைவேற்றப் பட்டது. பராமரிப்பு இன்மையால் சேதம் அடைந்த பாத்திரங்கள், எந்திரங்களை மாற்றி புதிதாக வாங்குவதற்கு முடிவு செய்யப் பட்டது. ஒரு மாதத்திற்குள் 388 அம்மா உணவகங்களுக்கு தேவையான பொருட் களை வாங்கி கொடுத்து தரத்தை உயர்த்த  திட்டமிடப்பட்டது. ஒவ்வொரு அம்மா உணவகத்துக்கும் ரூ.2 லட்சம் வீதம் செலவிட தீர்மானிக்கப்பட்டு புதிய பாத்திரங்கள், மாவு அரைக்கும் எந்தி ரம், சப்பாத்தி எந்திரம், மிக்சி உள்ளிட்டவை வாங்க பட்டியல் கொடுக்கப்பட்டுள்ளது. இது தவிர பில்லிங் மெஷின் வாங்க வும் முடிவு செய்யப்பட்டுள்ளது. டோக்கன் கொடுப்பதற்கு பதிலாக பில்லிங் எந்திரம் புதிதாக வாங்கி பயன்படுத்தப்பட உள்ளது.