districts

img

சென்னையின் 16 தொகுதிகளில் 38.68 லட்சம் வாக்காளர்கள்

சென்னை, அக். 26 சென்னையிலுள்ள 16 தொகுதிக ளில்  38 லட்சத்து  68 ஆயிரத்து 178 வாக்காளர்கள் உள்ளனர்.  மாவட்டத்தில் உள்ளடங்கியுள்ள 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான ஒருங்கி ணைந்த வரைவு வாக்காளர் பட்டி யலை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் ஆணையாளர் ஆர்.லலிதா வெள்ளியன்று  (27 ந் தேதி)  அங்கீகரிக்கப்பட்ட அரசி யல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னி லையில் வெளியிட்டார். ஆண் வாக்காளர்களை விட பெண் வாக்காளர்கள் அதிகமாக உள்ளனர். இதில் வேளச்சேரி தான் பெரிய தொகுதியாகும். இங்கு 3 லட்சத்து 7 ஆயிரத்து 460 வாக்காளர்கள் உள்ளனர். குறைந்த பட்சமாக துறை முகம் தொகுதியில் 1 லட்சத்து 70 ஆயி ரத்து 254 வாக்காளர்கள் உள்ளனர் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த பட்டியல் சென்னை மாநகராட்சி மண்டல அலுவலகங்கள் 4, 5, 6, 8, 9, 10, 13 மற்றும் அனைத்து வாக்கு சாவடி மையங்களிலும் பொது மக்களின் பார்வைக்கு வைக்கப்படும்.

  புதிய வாக்காளர் சேர்ப்பு மேலும், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்கபடாமல் உள்ளவர்கள் மற்றும் 1.1.2024 அன்று 18 வயது பூர்த்தி அடைபவர்கள் படிவம் 6 -ஐ பூர்த்தி செய்தும், பெயர்கள் நீக்கம் தொடர்பாக படிவம் 7- ஐ பூர்த்தி செய்தும், சட்டமன்றத் தொகுதிக்குள்ளேயே ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்கு குடிபெயர்ந்து புதிய வசிப்பிடத்தில் உள்ளவர்களும், மேலும் வேறு தொகுதிக்கு குடி பெயர்ந்தவர்களும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க மற்றும் திருத்தங்கள் செய்ய படிவம் 8- ஐ பூர்த்தி செய்தும் அதற்கான ஆவண ஆதார நகலினை இணைத்தும் சம்பந்தப் பட்ட வாக்காளர் பதிவு அலுவலர், சென்னை மாநகராட்சி மண்டல அலு வலரின் அலுவலகத்தில் 27.10.2023 முதல் 9.12.2023 முடிய உள்ள காலத்திற்குள் விண்ணப்பிக்கலாம். சிறப்பு முகாம்கள் மேலும் நவம்பர் 4,5, 18,19 (சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில்) ஆகிய நாட்களில் வாக்குச்சாவடி மையங்களில் சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளன.  பொதுமக்கள் இணையதளம் மூலமாகவும் தங்களு டைய பெயர்கள் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பிக்கலாம். (இணையதள முகவரிhttps://voters.eci.gov.in/), விண்ணப்பங்களை வலைதளம் மூலமாக மேற்கொள்ள வாக்காளர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். சென்னை மாவட்டத்தில்  3,719 வாக்குச்சாவடிகள்  உள்ளன. அதிகபட்ச மாக பெரம்பூர் சட்டமன்றத் தொகுதி யில் 284 வாக்குச்சாவடிகளும், குறைந்த பட்சமாக எழும்பூர் சட்டமன்றத் தொகுதியில் 169 வாக்குச்சாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.