தீக்கதிர் நாளிதழ் சந்தா சேர்ப்பு இயக்கம் மாநிலம் முழுவதும் நடைபெற்று வருகிறது. இதன் ஒருபகுதியாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டக்குழு சார்பில் சேகரிக்கப்பட்ட 150 சந்தாக்களை முதல் தவணையாக மத்தியகுழு உறுப்பினர் பி.சம்பதிடம், மாவட்ட செயற்குழு உறுப்பினர் எஸ்.கே. முருகேஷ் வழங்கினார். மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, செயற்குழு உறுப்பினர் இ.சர்வேசன், மாவட்ட குழு உறுப்பினர்கள் எஸ்.வி. வேணுகோபாலன், எஸ்.பாலசுப்ரமணியம், வெ. இரவீந்திர பாரதி ஆகியோர் உடன் உள்ளனர்.