districts

img

காஞ்சிபுரம் மாவட்டத்தில் 13.33 லட்சம் வாக்காளர்கள்

காஞ்சிபுரம்,ஜன.22- காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் காஞ்சிபுரம் மாவட்டத்திற்கு உட்பட்ட 4 சட்டமன்ற தொகு திகளுக்கு புகைப்படத்துடன் கூடிய இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சி யர் கலைச்செல்வி மோகன்  அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சி பிரமுகர்கள்  முன்னிலையில் திங்கட் கிழமை (ஜன.22) வெளி யிட்டார்.  அதன்படி  வெளியிடப் பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி மொத்த வாக்காளர்களின் எண் ணிக்கை 13,33,547. இதில் ஆண் வாக்காளர்கள் எண்ணிக்கை 6,48,934, பெண்  வாக்காளர்கள் எண்ணிக்கை  6,84,430, இதர வாக்காளர் கள் எண்ணிக்கை 183. காஞ்சிபுரம் மாவட்டத் தில் உள்ள சட்டமன்ற தொகுதிகளின் தற்போதைய  (22.01.2024) வாக்காளர்க ளின் விவரம் பின்வருமாறு.  ஆலந்தூர் தொகுதி ஆண்கள் - 188371, பெண்கள்  - 192842, இதர - 59, மொத்தம் - 381272, ஸ்ரீபெரும்புதூர் (தனி) தொகுதி ஆண்கள் -  182687, பெண்கள் - 193452,  இதர - 62, மொத்தம் - 376201. உத்திரமேரூர் தொகுதி ஆண்கள் - 128070, பெண்கள் - 137839, இதர - 41, மொத்தம் - 265950,  காஞ்சிபுரம் தொகுதி ஆண்கள் - 149806, பெண் கள் - 160297, இதர - 21, மொத்தம் - 310124 மாவட்டம் முழுவதும்  மொத்தம் ஆண்கள் 6 லட்சத்து 48 ஆயிரத்தி 934  பெண்கள் : 6லட்சத்து 84  ஆயிரத்தி 430 இதரர்கள்: 183 என 13லட்சத்து 33 ஆயிரத்தி 547 வாக்காளர் கள்  உள்ளனர்.   மேலும் வாக்காளர் பட்டியலினை  காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து வாக்குச் சாவடி மையங்கள், வாக்காளர் பதிவு அலுவலர் ,  வருவாய் கோட்ட அலுவ லர் அலுவலகங்கள் மற்றும்  உதவி வாக்காளர் பதிவு  அலுவலர் , வட்டாட்சி யர் மற்றும் மாநகராட்சி  ஆணையர் அலுவலகங்க ளில் பொது மக்கள் பார்வைக்கு வைக்கப்படும்.பொது மக்கள் அலுவலக நேரங்களில் இந்த வரைவு வாக்காளர் பட்டி யலை நேரடியாக பார்வை யிடலாம் என காஞ்சிபுரம் மாவட்டத் தேர்தல் அலுவல ரும், மாவட்ட ஆட்சிட்சியரு மான கலைச்செல்வி மோகன் தெரிவித்துள்ளார்.