வேலூர், ஜன.6 - வேலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட 5 சட்டமன்ற தொகுதிகளிலும் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க திருத்த பணிகள் மேற்கொள்ளப்பட்டு திங்களன்று(ஜன.6) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. காட்பாடி தொகுதியில் ஆண் வாக் காளர்கள் 1,20,992 பேரும், பெண் வாக்காளர்கள் 1,30,642 பேரும், 3ம் பாலி னத்தவர்கள் 40 பேர் என மொத்தம் 2,51,674 வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக் காளர்கள் 1,20,680 பேர், பெண் வாக்காளர்கள் 1,31,233 பேர், 3ம் பாலி னத்தவர்கள் 52 பேர் என மொத்தம் 2,51,965 வாக்காளர்கள் உள்ளனர். அணைக்கட்டு சட்ட மன்ற தொகுதியில் ஆண்வாக்காளர்கள் 1,27,769 பேர், பெண் வாக்காளர்கள் 1,36,908 பேர், 3ம் பாலி னத்தவர்கள் 37 பேர் என மொத்தம் 2,64,714 வாக்காளர்கள் உள்ளனர். கே.வி.குப்பம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,16,018 பேர், பெண் வாக்காளர்கள் 1,22,414 பேர், 3ம் பாலினத்தவர்கள் 10 பேர் என மொத்தம் 2,38,442 வாக்காளர்கள் உள்ளனர். குடியாத்தம் (தனி) சட்டமன்ற தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 1,45,757 பேர், பெண் வாக்காளர்கள் 1,56,956 பேர், 3ம் பாலினத்தவர்கள் 45 பேர் என மொத்தம் 3,02,758 வாக்காளர்கள் உள்ளனர். வேலூர் மாவட்டத்தில் அடங்கியுள்ள 5 சட்டமன்ற தொகுதிகளிலும் மொத்த ஆண் வாக்காளர்கள் 6,31,216 பேர், பெண் வாக்காளர்கள் 6,78,183 பேர், 3ம் பாலினத்தவர்கள் 184 பேர் என மொத்தம் 13,09,553 வாக்காளர்கள் உள்ளனர். மேலும், படிவங்களை Voters.eci.gov.in என்ற தேசிய இணையதளத்தின் மூலமாகவோ, அலைபேசி Voter Helpline App மூலமாகவோ அளிக்கலாம் என்று இறுதி பட்டியலை வெளியிட்டு ஆட்சியர் தெரிவித்தார்.