கீழ வெண்மணி தியாகிகள் நினைவிடத்தில் 1) சிபிஎம் மத்தியக் குழு உறுப்பினர் பெ.சண்முகம், 2) அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கத்தின் துணைத் தலைவர் ஏ.லாசர், 3) சிபிஎம் மாநில செயற்குழு உறுப்பினர்கள் பி.செல்வசிங், 4) கே.பாலபாரதி, 5) சிபிஐ தேசியக் குழு உறுப்பினர் கோ.பழனிசாமி 6) சிபிஎம் கந்தர்வகோட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினர் எம்.சின்னதுரை, நாகை நாடாளுமன்ற உறுப்பினர் வை.செல்வராஜ், உள்ளிட்டோர் மலர் வளையம் வைத்து வீரவணக்கம் செலுத்தினர்.
இந்திய தொழிற்சங்க மையம் சார்பில் செங்கொடியினை சிஐடியு மாநிலத் தலைவர் அ.சவுந்தரராசன் ஏற்றி வைத்தார். சிபிஎம் அரசியல் தலைமைக் குழு உறுப்பினர் ஜி.ராமகிருஷ்ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், சிஐடியு மாநிலச் செயலாளர் ஜி.சுகுமாறன் உள்ளிட்டோர் உடனிருந்தனர்.