districts

சுமைப்பணி தொழிலாளி கொலை வழக்கு அதிமுக நிர்வாகிகள் உட்பட 6 பேர் கைது

சிவகாசி, ஜூன் 7- சிவகாசி சேனையாபுரம் காலனியை சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் அர விந்தன் என்கிற பார்த்தீபன் (27). இவர் சுமைப்பணி தொழில் செய்து வந்தார். இந்த  நிலையில் கடந்த மார்ச் 30 அன்று சிவகாசி  அருகே உள்ள எம்.புதுப்பட்டி பகுதியில் வேலையை முடித்து விட்டு, தனது நண்பர்  துரைப்பாண்டி (27) என்பவருடன் மோட்டார்  சைக்கிளில் சிவகாசிக்கு திரும்பிக் கொண்டி ருந்தார். அப்போது, அவர்களை வழிமறித்த மர்ம கும்பல் ஒன்று, அரவிந்தனை அரிவாளால் வெட்டி விட்டு தப்பியோடியது. இதில், அர விந்தன் பரிதாபமாக உயிரிழந்தார். துரைப்  பாண்டி தீவிர சிகிச்சைக்கு பின் குணம டைந்தார். இதுகுறித்து, துரைப்பாண்டி கொடுத்த புகாரின் பேரில் எம்.புதுப்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசா ரணை நடத்தி வந்தனர்.  விசாரணையின் முடிவில் போலீ சார் சிவகாசி முத்துராமலிங்கநகரை சேர்ந்த நாக ராஜ் மகன் அருண்பாண்டியன் (வயது 31),  மோகன் மகன் பார்த்தீபன் (32), கண்ணன் மகன் முத்துக்கிருஷ்ணன் (23), சந்திரன் மகன் பழனிசெல்வம் (37), கந்தசேகர் மகன் பாண்டியராஜ் (19), கணேசன் மகன் மாரீஸ்வ ரன் (19), செல்லத்துரை மகன் மதன் (32), நேருஜிநகர் ராமர் மகன் மாரீஸ்வரன் (27),  ரிசர்வ்லைன் சிலோன் காலனி மகேஸ்வ ரன் மகன் ஹரிகுமார் (21) மற்றும் 18 வயது சிறுவன் ஒருவனை கைது செய்தனர். இந்த நிலையில் சிவகாசி பகுதியை சேர்ந்த அரசியல் கட்சிகளை சேர்ந்த 2 நிர்வாகிகளிடம் எம்.புதுப்பட்டி போலீசார் விசாரணை நடத்தினர்.  அதில் பல்வேறு தகவல்கள் கிடைத்த தாக கூறப்படுகிறது. இதைத்தொடர்ந்து, ஆனையூர் ஊராட்சி மன்ற தலைவரும், அ.தி.மு.க., ஒன்றிய செயலாளருமான லட்  சுமிநாராயணன் (38), தி.மு.க., மாணவரணி துணை அமைப்பாளர் பிரவீன் (35), தி.மு.க., இளைஞரணி துணை அமைப்பா ளர் அந்தோணிராஜ் (35), முத்துராமலிங்கம் நகர் பொன்ராஜ் (25), சவுந்தர் (25), சமத்து வபுரம் காலனி ஜோதிலிங்கம் (22), ஆகிய  6 பேரை போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறுகையில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட 10 பேரின் அலைபேசிகளை சோதனையிட்டதில், கொலை வழக்கில் 6 பேருக்கும் தொடர் புள்ளது தெரிய வந்தது. எனவே அவர்களை யும் கைது செய்துள்ளோம் என்றனர்.

;