கொச்சி, ஜன.21- நாட்டின் வளர்ச்சி பாதிக்கக் கூடாது என்பதில் அனைவரும் ஒன்றுபட்டு நிற்க வேண்டும். கருத்து வேறுபாடு களால் விலகி நிற்கக் கூடாது என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் எதிர்க் கட்சிகளுக்கு அழைப்பு விடுத் தார். யாரையும் அந்நியப்படுத்தும் அணுகுமுறை அரசிடம் இல்லை என்றும் முதல்வர் கூறினார். சுமார் 10,000 தொழில்முனைவோர் பங்கேற்ற தொழில்முனைவோர் மகா சங்கத்தை கலூர் சர்வதேச விளை யாட்டு மைதானத்தில் சனியன்று (ஜன.21) முதல்வர் தொடங்கி வைத் தார். அப்போது பேசிய அவர், தொழில் துறையில் கேரளா நாடு முழுமைக்கும் முன்மாதிரியாக உள்ளது. தொழில் முனைவோர் உச்சி மாநாடு என்பது ஒருசிலருக்கான ஊக்குவிப்பல்ல. நமது நாடு மேலும் வளத்தை நோக்கி பாய்ந்து செல்ல வேண்டும். இந்த திட்டத்தில் இருந்து யாரையும் விலக்கும் முயற்சி இல்லை. ஆனால் நாம் ஒன்றாக நிற்க முடியவில்லை. இது நம் நாட்டின் மோசமான நிலை. நமது கலாச்சார மேன்மை பொது வாக அனைவராலும் ஏற்றுக்கொள்ளப் படுகிறது. ஆனால் இதுபோன்ற விச யங்களில் நம்மில் சிலர் கடைப்பிடிக் கும் அணுகுமுறை ஏற்கத்தக்கதாக இல்லை. நாட்டின் வளர்ச்சிக்கு, நாம் அனைவரும் மற்ற எண்ணங்களை ஒதுக்கி வைத்துவிட்டு ஒன்றுபட வேண் டும். மற்ற மாநிலங்களில் இது சக ஜம். கட்சி சார்பற்ற முறையில் கருத்துக் களும் கருத்து வேறுபாடுகளும் இருக் கும். அது நாட்டின் வளர்ச்சியை பாதிக்கக் கூடாது. இதுபோன்ற விச யங்களில் நாம் ஒன்று திரள வேண்டும். அதற்கு பெரிய உள்ளம் இருக்க வேண் டும் என்றார் முதல்வர்.