districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர் சிறையிலடைப்பு

பெண்ணிடம் அத்துமீறல் இளைஞர் சிறையிலடைப்பு கோவை, பிப்.21- சாலையில் தனியாக நடந்து சென்ற பெண்ணிடம் அத்து மீறி நடந்து கொண்ட இளைஞர் கைது செய்யப்பட்டு சிறை யில் அடைக்கப்பட்டார்.  கோவை மாவட்டம், பீளமேடு காவல் நிலைய எல்லைக் குட்பட்ட பகுதியில் இளம்பெண் கடந்த 2 தினங்களுக்கு முன்பு  இரவு 8 மணி அளவில் தனியே நடந்து சென்று கொண்டிருந் தார். அப்போது அவ்வழியே இரு சக்கர வாகனத்தில் வந்த இளைஞர் ஒருவர் அவர் மீது மோதுவது போல் வந்துள்ளார். இளம் பெண் சுதாகரித்துக் கொண்டு வேகமாக சென்ற நிலை யில், சிறிது தூரம் சென்ற அந்த இளைஞர் மீண்டும் திரும்பி வந்து இளம் பெண்ணிடம் அத்துமீறி உள்ளார். உடனடியாக பெண் கூச்சலிடவே அக்கம் பக்கத்தினர் வருவதற்குள் அந்த  இளைஞர் இருசக்கர வாகனத்தை எடுத்து வேகமாக சென்றுவிட்டார். இதனையடுத்து அப்பெண் பீளமேடு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சிசிடிவி காட்சி களை வைத்து தப்பிச்சென்ற இளைஞரை தேடி வந்தனர். இந்நிலையில், திருநெல்வேலியைச் சேர்ந்த சிவக்குமார் என்ற இளைஞரை கைது செய்தனர். தற்போது கோவையில் தங்கி பணிபுரிந்து வரும் அவர் இளம்பெனிடம் அத்து மீறியது உறுதி செய்யப்பட்டதையடுத்து சிறையில் அடைக்கப் பட்டார்.

210 கிலோ புகையிலை பறிமுதல்

210 கிலோ புகையிலை பறிமுதல் கோவை, பிப்.21- கோவையில் இரண்டு கார்களில் 210.350 கிலோ புகை யிலை பொருட்களை கடத்தி வந்த இருவர் கைது செய்யப் பட்டனர். கோவை, ஈச்சனாரி பகுதியில் சுந்தராபுரம் காவல் துறையி னர் வாகன சோதனையில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது  அந்த வழியாக வேகமாக வந்த இரண்டு கார்களை நிறுத்தி  சோதனை செய்தனர். அந்த இரண்டு கார்களிலும் இருந்த 210.350 கிலோ புகையிலைப் பொருட்களை காவல் துறை யினர் பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு சுமார் இரண்டு லட்சம் ரூபாய் என்று கூறப்படுகிறது.  மேலும், இதுதொடர் பாக, அம்மாபாளையம் பகுதியைச் சேர்ந்த சரவணன் (38), குரும்பபாளையம் பகுதியைச் சேர்ந்த முருகன் (32) ஆகி யோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு, கைது செய்யப் பட்டனர்.

கிராவல் மண் கடத்தல்

கிராவல் மண் கடத்தல் மே.பாளையம், பிப். 21-  அனுமதியின்றி கிராவல் மண் கடத்திய லாரியை கனி மவளத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.  கோவை மாவட்டம், மேட் டுப்பாளையம் அடுத்துள்ள காரமடை காவல்நிலையத் திற்குட்பட்ட பெள்ளாதி என் னும் இடத்தில் உரிய அனு மதியின்றி சட்டவிரோதமாக கிராவல் மண் வெட்டி எடுத்து லாரிகள் மூலம் கடத்தப்பட்டு வருவதாக கனிமவளத் துறை அதிகாரிகளுக்கு தக வல் கிடைத்தது. இதனைய டுத்து, வியாழனன்று மாலை  கனிமவளத்துறை அதிகாரி கள் அப்பகுதியில் கண்கா ணிப்பில் ஈடுபட்டனர். அப் போது அவ்வழியாக வந்த  லாரியை நிறுத்தி சோதனை செய்த போது லாரியில் கிரா வல் மண் கடத்தி வரப்பட்டது தெரியவந்தது. இதனைய டுத்து, அந்த லாரியை பறி முதல் செய்த அதிகாரிகள்,  காரமடை காவல் நிலையத் தில் ஒப்படைத்தனர். இது குறித்து போலீசார் விசா ரித்து வருகின்றனர்.

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம்

ஒன்றிய அரசை கண்டித்து ஆர்ப்பாட்டம் ஈரோடு, பிப்.21- ஒன்றிய பாஜக அரசின் தமிழக விரோத நடவடிக்கையை கண்டித்து ஈரோட்டில், சமூக நீதி கூட்டமைப்பின் சார்பில் வெள்ளியன்று ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழகத்தின் வரிப்பணத்தைப் பறித்துக் கொண்டு, கல் விக்கான நிதியை மறுப்பதும், புதிய கல்விக் கொள்கை என்ற  பெயரில் இந்தியை திணிப்பதையும், யுஜிசி விதிகளைத் திருத்தி ஆளுநருக்கே அனைத்து அதிகாரங்களையும் தாரை வார்க்கும் பாசிச பாஜக அரசைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  உலக தாய்மொழி தினத்தையொட்டி, ஈரோடு  சூரம்பட்டி நால்ரோட்டில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, ஒருங்கிணைப்பாளர் கண.குறிஞ்சி தலைமை ஏற்றார். இதில், திராவிடர் கழக துணை பொதுச்செயலாளர் சே.மெ.மதிவதனி உட்பட பலர் கலந்து கொண்டனர்.

மதுபானக்கடைக்கு எதிர்ப்பு: மறியல்

மதுபானக்கடைக்கு எதிர்ப்பு: மறியல் சேலம், பிப்.21- அன்னதானப்பட்டியில் அமைக்கப்பட்ட மதுபானக் கடையை அகற்ற வேண்டும், என வலியுறுத்தி அப்பகுதி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். சேலம் மாவட்டம், அன்னதானப்பட்டி, புட்டா மிஷின் சாலையில், 200க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன. இந்நிலையில், சங்ககிரி மெயின் ரோட்டில் இருந்து புட்டா மிஷின் சாலை செல்லும் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை எண்:7185 வெள்ளியன்று திறக்கப்பட்டது. இப்பகுதி யில் மதுபானக்கடை அமைக்க எதிர்ப்பு தெரிவித்து, கடந்த மாதம் அப்பகுதி பொதுமக்கள் மாவட்ட ஆட்சியர் அலுவ லகத்திலும், டாஸ்மாக் நிர்வாகத்திடம் புகார் அளித்திருந்த னர். ஆனால், அதனையும் மீறி மதுபானக்கடை திறக்கப்பட் டுள்ளது. இதனால் ஆவேசமடைந்த அப்பகுதி பொதுமக்கள் வெள்ளியன்று, சங்ககிரி மெயின் ரோட்டில் அமர்ந்து மறிய லில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த அன்னதானப்பட்டி காவல் துறையினர் சம்பவ இடத்துக்கு வந்து, பேச்சுவார்த்தை  நடத்தினர். இதையடுத்து பொதுமக்கள் கலைந்து சென்ற னர்.

ராயர் கோவில் பிரச்சனை: சமூக ஒற்றுமை கூட்டம் நடத்த சிபிஎம் கோரிக்கை

ராயர் கோவில் பிரச்சனை: சமூக ஒற்றுமை கூட்டம் நடத்த சிபிஎம் கோரிக்கை அவிநாசி, பிப். 21 – அவிநாசி அருகே ராயர் கோவில் பிரச்சனையில் வருவாய்  கோட்டாட்சியர் கவனம் செலுத்தி சமூக ஒற்றுமை கூட்டம் நடத்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோரியுள்ளது. இது தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அவி நாசி ஒன்றியச் செயலாளர் அ.ஈஸ்வரமூர்த்தி, வெள்ளியன்று  திருப்பூர் வருவாய் கோடாட்சியரிடம் நேரில் கோரிக்கை மனுக் கொடுத்தார்.   இந்த மனுவில் கூறியிருப்பதாவது: வேலாயுதம்பாளை யம் ஊராட்சிக்கு உட்பட்ட ராயர் கோவில் பழமை வாய்ந்ததா கும். இக்கோவில் அனைத்து சமூக மக்களும் வந்து வழிபட் டும், ஆடு, கோழி வெட்டி விருந்து வைத்து சாப்பிடுவது  காலம் காலமாக நடந்து வருகிறது. தற்போது சிலர் சமூகம்  சார்ந்த பிரச்சனையாக எழுப்பி அமைதியாக இருக்கும் ஊரில்  சமூகப்பிரச்சனையாக்க முயற்சி செய்வதாகத் தெரிகிறது. எனவே வருவாய் கோட்டாட்சியர் தலையிட்டு சமூக ஒற்று மைக் கூட்டம் நடத்தி, அமைதியை நிலைநாட்ட கவனம் செலுத்த வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் கேட்டுக் கொள்வதாகக் கூறியுள்ளார்.

ஆகாசராயர் கோவில் சுவர் பிரச்சனை அமைச்சருக்கு விசிக கோரிக்கை

அவிநாசி, பிப்.21 – அவிநாசி தாலுகா, வேலாயுதம்பா ளையம் ஊராட்சிக்கு உட்பட்ட ஆகாச ராயர் கோயிலில், இந்து சமய அறநி லைத்துறை அமைச்சர் தலையிட்டு, புதி தாக கட்டப்பட்டுள்ள சுவரை அகற்றி முன்பு இருந்ததைப் போலவே இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் வன்னி யரசு கூறினார். அவர் ஆகாசராயர் கோவில் மற்றும்  புதிதாக கட்டப்பட்டுள்ள சுவர் ஆகிய வற்றைப் வியாழக்கிழமை பார்வை யிட்டு, செய்தியாளர்களிடம் கூறியதா வது:. இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர் தலையிட்டு இந்த கோயிலில்  புதிதாக கட்டப்பட்டுள்ள சுவரை அகற்றி விட்டு முன்பு இருந்ததைப் போலவே இருக்க நடவடிக்கை எடுக்க வேண் டும். பாஜகவின் ஒரே நாடு என்பது இந்து  ராஷ்டம், ஒரே மொழி என்பது இந்தி  மொழி, இதை நடைமுறைப்ப டுத்துவதற்கு, மும்மொழிக் கொள்கை,  தேசிய கல்விக் கொள்கையைத் திணிக் கின்றனர், பாஜக தலைவர் அண்ணா மலை, தமிழிசை போன்றவர்கள் எல் லாம் தமிழில் படித்துதான் ஐபிஎஸ், மருத்துவர் என பட்டம் பெற்றனர். நாம்  தமிழர் கட்சி ஆர்எஸ்எஸ் யின் தொங்கு  சதையாக செயல்பட்டுக் கொண்டி ருக்கிறது. 2026 தேர்தலில் திமுகவுடன் மதச்சார்பற்ற அணியின் இடம்பெறும் என்று விசிக தலைவர் கூறியுள்ளார் எனவும் தெரிவித்தார். இந்த நிகழ்வில் விசிகவின்  தலைமை நிலையச் செயலாளர் தமிழ்ச் செல்வன், மாவட்டச் செயலாளர்கள் சண்முகம், மூர்த்தி, தங்கவேல், வழக்க றிஞர் சத்தியமூர்த்தி உட்பட பலர் கலந்து  கொண்டனர்.

மைவி 3 ஏட்ஸ் நிறுவன மோசடி பணமிழந்தவர்கள் புகாரளிக்க அழைப்பு

கோவை, பிப்.21- மைவி 3 ஏட்ஸ் நிறுவனத்தில் முதலீடு செய்து பணத்தை இழந்தவர்கள், தங்களது அசல் ஆவணங்களுடன் கோவை பொருளாதார குற்றப்பிரிவு அலுவலகத்தில் உடனடியாக புகார் அளிக்குமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.  மைவி 3 ஏட்ஸ் நிறுவனம் 19 கிளை நிறுவனங்களுடன் தமிழ கத்தின் பல்வேறு மாவட்டங்களில் செயல்பட்டு வந்தது.  மேலும் கர்நாடகா, கேரளா, ஆந்திரா, தெலுங்கானா, உத்தரப் பிரதேசம், மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களிலும் இந் நிறுவனம் இயங்கி வந்தது. இந்த நிறுவனத்தின் இயக்கு நர் சக்தி ஆனந்தன், பொதுமக்களிடம் முதலீட்டுத் தொகை  பெற்று மோசடி செய்வதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து  விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில், முதலீடு செய்து ஏமாந்தவர்கள் புகார் அளிக்குமாறு கோவை  பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் அறிவித்துள்ளனர்.

விபத்தில் தந்தை பலி: குழந்தைகள் படுகாயம்

சேலம், பிப்.21- வாழப்பாடி அருகே ஏற்பட்ட சாலை விபத்தில் தந்தை உயிரிழந்த நிலையில், அவ ரது 2 குழந்தைகள் படுகாயங்களுடன் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள னர். சேலம் மாவட்டம், வாழப்பாடி உள்ள சோமம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பிர காஷ் (33). கட்டிடத் தொழிலாளியான இவ ருக்கு வசந்தா என்கிற மனைவியும், ரித்திகா  (11) என்ற மகளும், கவின் (9) என்ற மகனும் உள்ளனர். இவர் வியாழனன்று இரவு வாழப் பாடியில் இருந்து தனது இருசக்கர வாக னத்தில் இரண்டு குழந்தைகளுடன் சோமம் பட்டியில் உள்ள தனது வீட்டிற்கு சென்றுள் ளார். சோமம்பட்டி பெரியாண்டிச்சி அம்மன்  கோவில் ஆட்கொல்லி வளைவு அருகே வந்த  போது, எதிரே திம்மநாயக்கன்பட்டி பகுதி யில் இருந்து வந்த ஒரு வேன் மோதியது. இதில் மூன்று பேரும் தூக்கி வீசப்பட்டதில், பலத்த காயமடைந்த பிரகாஷ் வாழப்பாடி  அரசு மருத்துவமனைக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைக்கப்பட்டார். ஆனால், அவர்  வழியிலேயே உயிரிழந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர். மேலும், படுகாயமடைந்த ரித் திகா, கவின் இரண்டு பேரும் வாழப்பாடி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்று, மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு  மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட் டுள்ளனர்.

இந்தியை திணிக்க ஒன்றிய அரசு துடிக்கிறது
அமைச்சர் மு.பெ.சாமிநாதன் விமர்சனம்

கோவை, பிப்.21- இந்தியை திணிக்க மூன்றாவது முறை யாக ஒன்றிய பாஜக அரசு துடிக்கிறது. எனவே நமது போராட்டமும் தொடர்கிறது என தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமி நாதன் பேசினார். உலக தாய்மொழி தினத்தை முன்னிட்டு, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை சார்பில் கோவை ஈச்சனாரி பகுதியில் உள்ள இரத்தினம் கல்லூரி அரங்கில் உவகை பெரு விழா நடைபெற்றது. இவ்விழாவை தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநா தன் துவக்கி வைத்தார். பெருவிழாவின் துவக் கமாக உலக தாய்மொழி நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. தொடர்ந்து கவிதைப்பித்தன் தலைமையில் பாட்டரங்கம், தமிழ் இணை யக் கல்விக்கழக நெறியரைஞர் புலவர் செந் தலை ந.கவுதமன் தலைமையில் கருத்த ரங்கம், நீதியரசர் அ.முகமது ஜியாவுதீன் தலைமையில் மனிதவாழ்வின் வருங்கா லத்தை வளமாக்குவது செயற்கை நுண்ண றிவா? இயற்கை நுண்ணறிவா? என்ற தலைப் பில் பட்டிமன்றம் நடைபெற்றது. முன்னதாக தமிழ்நாடு அரசு சார்பில் 2023 ஆம் ஆண்டுக் கான உலகத் தமிழ் சங்க இலக்கண விருது இங்கிலாந்தை சேர்ந்த செல்லத்தம்பி சீறிக் கந்தராசா என்பவருக்கும், உலகத் தமிழ் சங்க இலக்கிய விருது சிங்கப்பூரை சேர்ந்த பிச் சினிக்காடு இளங்கோவிற்கும், உலகத் தமிழ் சங்க மொழியியல் விருது பிரான்சு நாட்டைச்  சேர்ந்த தலிஞ்சான் முருகைய்யா என்பவ ருக்கும் வழங்கப்பட்டது. இவ்விழாவில் அமைச்சர் மு.பெ.சாமி நாதன் பேசுகையில், கோவையில் நடை பெற்ற செம்மொழி மாநாடு அனைவருக்கும் நினைவிருக்கும். அன்றைய நாளில் கலை ஞர், அன்றைக்கு பிரதமராக இருந்த மன் மோகன் சிங் அவர்களிடம் தமிழை செம் மொழியாக அந்தஸ்து பெற வேண்டும் என்று கோரிக்கை விடுத்து அதற்கான அரசாணை வழங்கப்பட்டது.  கலைஞர் முன்னெடுத்த இந்தி திணிப்பு சட்ட நகல் எரிப்பு போராட் டத்தில் நானும் பங்கு பெற்று சிறைவாசம் சென்றேன். பேரறிஞர் அண்ணா, கலைஞர் எல்லாம் தமிழை எவ்வாறு பாதுகாக்க வேண் டும் என்று நினைத்தார்களோ அதன்படி தமிழக முதலமைச்சர் பல்வேறு வழிகளில் இந்த துறை சார்ந்த பல்வேறு நடவடிக்கை களை முன்னெடுத்து வருகிறார். தமிழ் மொழி அழியாமல் பாதுகாக்கப்பட வேண்டும், தற் போதைய காலகட்டத்தில் பிற மொழிகளின் ஆதிக்கங்கள் அதிகரித்து விட்டது, வணிக வளாகங்களில் உள்ள பெயர் பலகைகளில் தமிழ் மொழியை விட ஆங்கிலம் போன்ற மொழிகளே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. அதுமட்டுமின்றி ஒன்றிய அரசு மூன்றாவது முறையையும் திணிப்பதற்கு துடித்துக் கொண்டே இருக்கிறது.  இத்தகைய சூழ லில் மீண்டும் நம்முடைய தமிழ் மொழிக்கான போராட்டம் நடைபெறுகிறது.  நம்முடைய தாய் மொழியை நாம் மதிக்க வேண்டும். நம்முடைய தாய்மொழியை பாதுகாப்போம், பிறக்கக்கூடிய குழந்தைகளுக்கு தமிழில் பெயர் சூட்டுவோம், என்றார்.  முன்னதாக, இந்நிகழ்வில், தமிழ் வளர்ச் சித்துறை இயக்குநர் அவ்வை அருள், தமிழ் வளர்ச்சித் துறை அரசு செயலாளர் இராஜா ராமன், கோவை மாவட்ட ஆட்சியர் பவன் குமார் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்ற னர்.