தருமபுரி, டிச.1- பொதுமக்களுக்கு இடையூறாக உள்ள மதுபானக்கடைகளை அகற்ற வேண்டும், என வாலிபர் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இந்திய ஜனநாயக வாலிபர் சங் கத்தின் தருமபுரி மாவட்ட பேரவைக் கூட்டம், முத்து நினைவு அறக்கட் டளை அலுவலகத்தில் ஞாயிறன்று நடைபெற்றது. மாவட்டத் தலைவர் எஸ்.சபரிராஜன் தலைமை வகித் தார். மாவட்டக்குழு உறுப்பினர் இ. மீரா சங்கத்தின் கொடியை ஏற்றி வைத் தார். அஞ்சலி தீர்மானத்தை பிரவீன் வாசித்தார். செ.குப்பன் வரவேற்றார். மாநிலப் பொருளாளர் கே.பாரதி துவக்கவுரையாற்றினார். மாவட்டச் செயலாளர் எம்.அருள்குமார், மாவட் டப் பொருளாளர் எம்.சிலம்பரசன் ஆகியோர் அறிக்கைகளை முன் வைத்தனர். வாலிபர் சங்க முன்னாள் தலைவர்கள் தி.வ.தனுசன், ஆ.ஜீவா னந்தம், இந்திய மாணவர் சங்க மாவட் டச் செயலாளர் ஸ்டாலின் ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இக்கூட்டத்தில், தருமபுரியில் சிப் காட் அமைத்து இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பளிக்க வேண்டும். ஓய்வு பெற்றவர்களை மீண்டும் பணி யமர்த்துவதை நிறுத்தி, ஒன்றிய, மாநில அரசு காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும். காவிரி உபரிநீரை ஏரிகளில் நிரப்பும் திட்டத்தை துவங்க வேண்டும். தருமபுரி - மொரப்பூர் இடையே ரயில் பாதை அமைக்கும் பணியினை விரைவுப்படுத்த வேண் டும். பாலக்கோட்டில் தக்காளி குளிர் பதன கிடங்கு, பாப்பாரப்பட்டியில் வேளாண் உற்பத்திப் பொருட்களின் மதிப்புக் கூட்டு தொழிற்சாலை, பாப்பி ரெட்டிப்பட்டியில் அரசு மகளிர் கல்லூரி மற்றும் மரவள்ளிக்கிழங்கு ஆலை அமைக்க வேண்டும். பொது மக்களுக்கும், போக்குவரத்திற்கும் இடையூறாக உள்ள மதுபானக் கடை களை அப்புறப்படுத்த வேண்டும். அனைத்து பேரூராட்சிகளிலும் 100 நாள் வேலை திட்டத்தை அமல்ப டுத்த வேண்டும். போதைப்பொருட் கள் புழக்கத்தை கட்டுப்படுத்தி, விற் பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட தீர்மா னங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத்தொடர்ந்து, சங்கத்தின் தருமபுரி மாவட்டத் தலைவராக குறளரசன், செயலாளராக எம்.அருள் குமார், பொருளாளராக எம்.சிலம் பரசன், துணைத்தலைவர்களாக மீரா, குப்பன், துணைச்செயலாளர் களாக கோவிந்தசாமி, பிரவீன் மற் றும் 23 மாவட்டக்குழு உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர். சங்கத்தின் மாநில துணைச்செயலாளர் கே.ஆர்.பாலாஜி நிறைவுரையாற்றினர். முடி வில், மாவட்டக்குழு உறுப்பினர் குறளரசன் நன்றி கூறினார்.