சென்னை, மார்ச் 2- இடதுசாரி எழுத்தாளரும், சிந்தனை யாளருமான ராசேந்திர சோழன் எனும் அஸ்வகோஷ் உடல்நலக்குறைவால் வெள்ளியன்று (மார்ச் 1) காலமானார். அவருக்கு வயது 77. பார்க்கின்சன் எனும் நோயால் பாதிக்கப்பட்டிருந்த அவர், எழும்பூரில் உள்ள அவரது மகன் நீதிபதி பார்த் திபன் இல்லத்தில் காலமானார். அன் னாரது உடலுக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மத்திய சென்னை மாவட்டச் செயலாளர் ஜி.செல்வா, தமு எகச மாநிலப் பொருளாளர் சைதை ஜெ, மேனாள் மாநில நிர்வாகி இரா.தெ. முத்து, மாநில செயற்குழு உறுப்பினர் அ.உமர்பாரூக், மாநிலக்குழு உறுப்பி னர் சிராஜ் உள்ளிட்ட பல்வேறு அமைப்பு களின் தலைவர்கள் அஞ்சலி செலுத் தினர். இதனைத்தொடர்ந்து அவரது உடல் மருத்துவ ஆராய்ச்சிக்காக சென்னை ராஜீவ்காந்தி மருத்துவம னையில் ஒப்படைக்கப்பட்டது. தமுஎகச இரங்கல் புனைவிலக்கியத்திற்கும் முற் போக்கு கருத்துலகிற்கும் 1970கள் முத லாக காத்திரமான பங்களிப்பினைச் செய்துவந்த அஸ்வகோஷ் எனும் தோழர் ராசேந்திர சோழன் காலமா னார் என்பதை கடுந்துயருடன் தெரிவித் துக்கொள்கிறோம். 17.12.1945 அன்று உளுந்தூர் பேட்டையில் பிறந்த ராசேந்திர சோழன், விழுப்புரம் மாவட்டம், மயிலத்தில் பள்ளி ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். தமிழ்நாடு முற்போக்கு எழுத் தாளர் சங்கத்தின் முன்னோடிகளில் ஒரு வராக, தோழர் கே.முத்தையாவின் தலை மையில் தீவிரமாக இயங்கியவர். சிறு கதைகள் மட்டுமின்றி ஏராளமான அர சியல், வரலாற்று நூல்களையும் எழுதி யுள்ளார். பத்துக்கு மேற்பட்ட சிறு கதைத் தொகுதிகளும் மூன்று நாவல் களும் வெளியிட்டுள்ளார். பாதல் சர்க் காரின் நாடகப் பட்டறையில் பயிற்சி பெற்று, பல நாடகங்களை இயக்கி அரங்கேற்றினார். அவசர நிலைக்கு எதிரான அவரது விசாரணை என்கிற நாடகம் பல ஊர் களில் நிகழ்த்தப்பட்டது. தமுஎகசவுக்கு நாடக முகத்தை வழங்கிய முன்னோடி. பல மாவட்டங்களில் நாடகப் பட்டறை நடத்தி தமுஎகச நாடகக் குழுக்களை உருவாக்க உதவினார். கருத்து வேறு பாடு ஏற்பட்டு பிற்காலத்தில் தமுஎகச விலிருந்து விலகியிருந்தாலும் இறுதி வரை ஓர் இடதுசாரியாகவே வாழ்ந்த வர். முற்போக்கு இலக்கிய இயக்கத் திற்கு பெரும்பங்காற்றி மறைந்துள்ள தோழர் ராசேந்திர சோழன் மறைவுக்கு தமுஎகச தனது அஞ்சலியை உரித்தாக் குகிறது என்று தமுஎகச மாநிலத் தலை வர் மதுக்கூர் ராமலிங்கம், பொதுச்செய லாளர் ஆதவன் தீட்சண்யா வெளியிட் டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ள னர்.