ஈரோடு, பிப். 14- ஒன்றிய அரசிற்கு எதிராக வரும் 16ஆம் தேதி நடைபெறும் வேலை நிறுத்த போராட் டம் குறித்து ஈரோடு மாவட்டத்தில் சிஐடியு சார்பில் பிரச்சாரம் நடைபெற்றது. தொழிலாளர், விவசாயிகள் மற்றும் மக்கள் விரோத, ஒன்றிய அரசின் கொள்கை களுக்கு எதிராக அனைத்து மத்திய தொழிற் சங்கங்கள் மற்றும் ஐக்கிய விவசாயிகளின் கூட்டமைப்பு சார்பில் பிப்ரவரி 16ஆம் தேதி நாடு தழுவிய பொது வேலை நிறுத்தம் அறி விக்கப்பட்டுள்ளது. இவ்வேலை நிறுத் தத்தை ஈரோடு மாவட்டத்தில் வெற்றிகரமாக நடத்த அனைத்து தொழிற்சங்க கூட்ட மைப்பு மற்றும் ஐக்கிய விவசாயிகள் அமைப் பினர் முடிவு செய்துள்ளனர். இதன் ஒரு பகுதியாக, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட ஆர்.என்.புதூர் பகுதியில் உள்ள மண்டலம் 1 அலுவலக வளாகத்தில், தூய்மைப் பணி யாளர்களிடையே சிஐடியு மாவட்டத் தலை வர் எஸ்.சுப்ரமணியன் விளக்கிப் பேசினார். அதேபோல், கவுந்தப்பாடி பகுதியில் மின் ஊழியர் மத்திய அமைப்பின் சார்பில் மின் வாரிய பணியாளர்கள் மற்றும் ஊழியர்க ளிடையே மண்டலச் செயலாளர் சி.ஜோதி மணி விளக்கிப் பேசினார்.