நாமக்கல், பிப்.26- 2 கிராம நிர்வாக அலுவலர்களின் பணியிடை நீக்கம் உத்தரவை திரும்பப்பெற வலியுறுத்தி நடை பெற்ற காத்திருப்புப் போராட்டம் புத னன்று முடிவுக்கு வந்தது. நாமக்கல் மாவட்டம், கொண்டப் பநாயக்கன்பட்டி ஊராட்சிக்குட் பட்ட புறம்போக்கு நிலத்தில், அனு மதியின்றி கற்கள் வெட்டி எடுப்பதாக புகார் எழுந்தது. இதையடுத்து கடந்த பிப்.19 ஆம் தேதியன்று நாமக்கல் கோட்டாட்சியர் பார்த்திபன் தலை மையிலான வருவாய்த்துறையினர், அப்பகுதியில் ஆய்வு செய்து, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பாறை களை உடைக்கும் இயந்திரங்கள் உள்ளிட்ட 23 வாகனங்களை பறிமு தல் செய்தனர். தொடர்ந்து, சட்ட விரோதமாக கற்களை வெட்டி எடுத் ததாக ஐந்து பேர் மீது வழக்குப்பதிவு செய்து, அதில் 3 பேர் கைது செய் யப்பட்டனர். சட்டவிரோதமாக இயங் கிய கல் குவாரி குறித்து அரசுக்கு முறையாக தகவல் தெரிவிக்க வில்லை எனக்கூறி, கொண்டப்ப நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலு வலர் ஜான் பாஸ்கோ, விட்டப்ப நாயக்கன்பட்டி கிராம நிர்வாக அலு வலர் கோகிலா ஆகியோரை பணி யிடை நீக்கம் செய்து, நாமக்கல் கோட் டாட்சியர் பார்த்திபன் உத்தரவிட்டி ருந்தார். இதனால் அதிர்ச்சியடைந்த மாவட்டம் முழுவதும் உள்ள கிராம நிர்வாக அலுவலர்கள், குவாரி விவ காரத்தில் தங்கள் தரப்பில் தவறு இல்லை. பணியிடை நீக்கம் உத்த ரவை ரத்து செய்ய வேண்டும் எனக் கூறி, கடந்த இரண்டு நாட்களாக நாமக்கல் கோட்டாட்சியர் அலுவல கம் முன்பு காத்திருப்புப் போராட்டத் தில் ஈடுபட்டனர். இதுகுறித்து வருவாய்த்துறை உள்ளிட்ட அலுவலர்கள் பேச்சு வார்த்தை நடத்திய நிலையில், புத னன்று உடன்பாடு ஏற்பட்டது. சம்பந் தப்பட்ட இரண்டு கிராம நிர்வாக அலு வலர்களின் பணியிடை நீக்கம் உத்த ரவு ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக் கப்பட்டது. கொண்டப்பநாயக்கன் பட்டி கிராம நிர்வாக அலுவலர் ஜான் பாஸ்கோ அக்கியம்பட்டிக்கும், அங்கு பணியாற்றிய சரவணன் கொண்டப்ப நாயக்கன்பட்டிக்கும் மாறுதல் செய் யப்பட்டனர். மேலும், விட்டப்பநாயக் கன்பட்டி கிராம நிர்வாக அலுவல ராக பணியாற்றி வந்த கோகிலா மீண் டும் அதே கிராமத்தில் பணியாற்ற அனுமதிக்கப்பட்டார். இதற்கான உத் தரவை கோட்டாட்சியர் பார்த்திபன் வெளியிட்டார். இதையடுத்து இரண்டு நாட்களாக நடைபெற்ற காத்திருப்புப் போராட்டத்தை கிராம நிர்வாக அலு வலர்கள் விலக்கிக் கொண்டு பணிக்கு திரும்பினர்.