உதகை, நவ.16- முதுமலை புலிகள் காப்ப கத்தில் வனவிலங்குகள் கணக்கெடுப்பு பணி புத னன்று துவங்கியது. நீலகிரி மாவட்டம், முதும லையில் உள்ள புலிகள் காப் பகத்தில் ஏராளமான புலிகள், யானைகள், கரடிகள் உள்ளிட்ட வனவிலங்குகள் உள்ளன. இங்கு ஆண்டுக்கு இருமுறை வனவிலங்கு கணக்கெடுப்பு நடத்தப்படுவது வழக்கம். பருவமழைக்கு முன்னரும், மழை ஓய்ந்த பின்னரும் என கணக்கெடுப்பு நடத்தப்படும். இந்த ஆண்டு பருவமழைக்கு பிந்தைய கணக்கெடுப்பு பணி புதனன்று தொடங்கியது. பாதுகாப்பு உபகரணங்களுடன் வனப்பகுதிக்குள் சென்று கணக்கெடுப்பு பணியில் 100க்கும் மேற்பட்ட வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இந்த பணி வரும் நவ.20 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முன்னதாக, மசினகுடியில் பகுதியில் கரடிகள் நட மாட்டம் அதிகம் உள்ளது. இதனால் அங்கு கணக்கெடுப் புக்காக சென்ற வன ஊழியர்கள் பாதுகாப்புக்காக கையில் தீப்பந்தங்களை ஏந்தி சென்றனர்.