ஈரோடு, மார்ச் 20- திருப்பூர் நாடாளுமன்ற தொகுதி இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வேட் பாளர் கே.சுப்பராயன் எம்பி., ஈரோடு சிபிஎம் மாவட்டக்குழு அலுவலகத் திற்கு வருகை தந்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கட்சியினர் வரவேற்பு அளித்தனர். திருப்பூர் நாடாளுமன்ற தொகு தியின் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி யின் வேட்பாளர் கே.சுப்பராயன் புத னன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி யின் ஈரோடு மாவட்டக்குழு அலுவ லகத்திற்கு வருகை தந்தார். அவ ருக்கு சிபிஎம் ஈரோடு மாவட்டச் செயலாளர் ஆர்.ரகுராமன் தலைமை யில் வரவேற்பு அளித்து வாழ்த்து கள் தெரிவித்தனர். மேலும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வெற்றிக்கு உடனிருந்து பணியாற்றுவோம் என் கிற உறுதியை மார்க்சிஸ்ட் கட்சி யின் தலைவர்கள் அளித்தனர். இந்நி கழ்வில், மார்க்சிஸ்ட் கட்சியின் மூத்த தோழர் கே.துரைராஜ், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ப.மாரி முத்து, ஆர்.கோமதி, எஸ்.சுப்ரமணி யன், ஏ.எம்.முனுசாமி மற்றும் பி.சுந்த ரராஜன் ஆகியோர் பங்கேற்றனர். முன்னதாக கே.சுப்பராயன் எம்பி.,யுடன் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் வடக்கு மாவட்டச் செயலா ளர் மோகன்குமார், தெற்கு மாவட்டச் செயலாளர் எஸ்.டி.பிரபாகரன், ஸ்டாலின் குணசேகரன், துளசி மணி, கல்யாணசுந்தரம் மற்றும் சின் னச்சாமி உள்ளிட்டோர் வந்திருந்த னர். இதேபோன்று, கே.சுப்ராயன் எம்பி., அந்தியூர் சட்டமன்ற உறுப்பி னர் ஏ.ஜி.வெங்கடாசலத்தை நேரில் சந்தித்து பொன்னாடை அணிவித்து ஆதரவைக்கோரினார். இதில் கூட் டணி கட்சி நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். திருப்பூர் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வேட் பாளர் கே சுப்பராயன் புதன்கிழமை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் திருப்பூர் மாவட்டக்குழு அலுவலகத் திற்கு வருகை தந்து மார்க்சிஸ்ட் கட்சி நிர்வாகிகளை சந்தித்தார். அவருக்கு மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு உறுப்பினர் ஜி சுகுமாரன் மாநிலக் குழு உறுப்பினர் கே காமராஜ் மாவட்ட செயற்குழு உறுப்பினர் எம் ராஜகோபால் ஆகியோர் துண்டு அணிவித்து வரவேற்பு தெரிவித்த னர். நாடாளுமன்றத் தேர்தலில் பார திய ஜனதா அரசு தோற்கடிப்பதும் இடதுசாரிகள் பலத்தை அதிக ரிப்பதும் மிகவும் அவசியம் என்று மாநில செயற்குழு உறுப்பினர் ஜி. சுகுமாரன் கூறினார். அதேபோல் வேட்பாளர் கே சுப்ப ராயன், தந்திரமிக்க பாரதிய ஜனதா கட்சியை தோற்கடித்து, இந்தியா அணி வெல்ல வேண்டும். இடதுசா ரிகள் பலம் அதிகரிக்க வேண்டும் அதற்கு இந்த தேர்தலில் பாடுபடு வோம் என்று கூறினார். இதில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்டச் செயலாளர் செ.முத்து கண்ணன். இந்தியா கம் யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற் குழு உறுப்பினர் எம். ரவி, மாநகர் மாவட்டச் செயலாளர் எஸ். ரவிச் சந்திரன், மாநகராட்சி துணை மேயர் ஆர்.பாலசுப்பிரமணியம் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அணி யினர் திரளாக பங்கேற்றனர்.