districts

img

சிறை நிரப்பும் போராட்டத்தில் அலையலையாய் அணி திரள்வோம் அரசு ஊழியர் சங்க மண்டல மாநாடு அறைகூவல்

கோவை, ஜன. 19– அரசு ஊழியர்கள் தொடர்ந்து வலியு றுத்தி வரும் கோரிக்கைகளை நிறைவேற்ற மறுக்கும் ஆட்சியாளர்களுக்கு நமது ஒற்றுமையை நிருபிக்கும் வகையில் பிப்.2 முதல் நடைபெறும் தொடர் மறியல், சிறை நிரப்பும் போராட்டத்தில் அலையலையாய் அணி திரள்வோம் என தமிழ்நாடு அரசு ஊழி யர் சங்கத்தின் கோவை மண்டல மாநாடு அறைகூவல் விடுத்துள்ளது.  தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் போராட்ட ஆயத்த கோவை மண்டல மாநாடு கோவை காந்திபுரத்திலுள்ள கமலம் துரை சாமி திருமண மண்டபத்தில் செவ்வாயன்று நடைபெற்றது.

இம்மாநாட்டிற்கு கே.முத்துக் குமார், (நீலகிரி) சி.எஸ்.பால்ராஜ்( கோவை), ஏ.ராணி(திருப்பூர்) அ.ராக்கிமுத்து (ஈரோடு), கே.ராஜேந்திரபிரசாத் (நாமக்கல்) ஆகியோர் தலைமையேற்றனர். ஏ.ஆர்.அசரா (நீலகிரி), பி.செந்தில்குமார் (கோவை), எம்.பாலசுப்பிர மணியன் (திருப்பூர்) ச.விஜயமனோகரன் (ஈரோடு), ஆர்.முருகேசன் (நாமக்கல்) ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில பொதுச் செயலாளர் ஆ.செல்வம், மாநில துணைத் தலைவர் மு.சீனிவாசன், மாநில செயலாளர் சி.பரமேஷ்வரி ஆகியோர் சிறப்புரையாற்றி னார். தமிழ்நாடு அரசு ஓய்வூதியர் சங்கத் தின் மாநில துணை தலைவர் எஸ்.சந்திரன்  வாழ்த்திப் பேசினார்.

இம்மாநாட்டில், புதிய பென்சன் திட் டத்தை ரத்து செய்ய வேண்டும். அகவிலைப் படி, சரண்டர் உள்ளிட்ட பறிக்கப்பட்ட உரி மைகளை உடனடியாக வழங்க வேண் டும். ஜாக்டோ - ஜியோ போராட்டத்தில் பங் கேற்றதற்காக 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஊழியர்களுக்கு வழங்கப்பட்ட 17பி குற்ற குறிப்பாணையை ரத்து செய்திட வேண்டும். ஓய்வுபெறும் நாளில் முன்னாள் மாநில தலை வர் மு.சுப்பிரமணியன் உள்ளிட்டோரை தற் காலிக பணி நீக்கம் செய்த உத்தரவை திரும் பப் பெற வேண்டும். அரசுத்துறையில் உள்ள காலிப்பணியிடங்களை நிரப்பிட வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி பிப். 2 ஆம் தேதி முதல் நடைபெறும் தொடர் மறியல் மற்றும் சிறை நிரப்பும் போராட்டத்தில் அரசு ஊழியர்கள் பெரும் திரளாய் பங்கேற்பது என முடிவெடுக்கப்பட்டது. முடிவில் அரசு ஊழியர் சங்க கோவை மாவட்ட பொருளாளர் பி.நடரா ஜன் நன்றி கூறினார்.

;