districts

img

திருமூர்த்தி அணையிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!

உடுமலை, ஆக.18- திருமூர்த்தி அணையிலிருந்து, பிஏபி இரண்டாம் மண்டலப் பாசனத் திற்காக அமைச்சர் மு.பெ.சாமிநா தன் ஞாயிறன்று தண்ணீரை திறந்து வைத்தார். பரம்பிக்குளம் - ஆழியாறு பாச னத் திட்டத்திலுள்ள (பிஏபி) திரு மூர்த்தி அணை மூலம் திருப்பூர், கோவை மாவட்டங்களில் உள்ள 3 லட்சத்து 77 ஆயிரம் ஏக்கர் நிலங்கள் பாசன வசதி பெறுவதுடன், உடு மலை நகராட்சி, உடுமலை, குடிமங்க லம், மடத்துக்குளம் ஒன்றியப் பகுதி கிராமங்களுக்கு குடிநீர் திட்டங்க ளும் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பாசன நிலங்கள் நான்கு மண்டலமாக பிரித்து, சுழற்சி முறையில் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது. இதனைய டுத்து இரண்டாம் மண்டலப் பாசனத் திற்கு நீர் திறக்க வேண்டும் என்ற விவ சாயிகளின் கோரிக்கையை ஏற்று, ஞாயிற்றுக்கிழமை திருமூர்த்தி அணையிலிருந்து செய்தித்துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் தண் ணீரை திறந்து வைத்தார்.  இதன்மூலம், திருப்பூர், கோவை  மாவட்டத்திலுள்ள 94 ஆயிரத்து 201 ஏக்கர் நிலங்கள் பாசன வசதி  பெறும். முன்னதாக, இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியர் கிறிஸ்துராஜ் தலைமை வகித்தார். இதில் பொள் ளாச்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஈஸ்வரசாமி மற்றும் பொதுப்பணித் துறை அதிகாரிகள், பாசன விவசா யிகள் சங்கத் தலைவர்கள் உட்பட  பலர் கலந்து கொண்டனர்.