districts

img

தண்ணீரின்றி வறண்டு போகும் நீர்நிலைகள்

`திருநெல்வேலி, ஏப்.28-வெயிலின் தாக்கத்தால் கருப்பாநதி அணை வறண்டதை அடுத்து அணையில் இருக்கும் மீன்கள் இறந்து மிதக்கின்றன. நெல்லை மாவட்டம் கடையநல்லூர் அருகே மேற்குத் தொடர்ச்சிமலை அடிவாரத்தில் கருப்பாநதி நீர்த்தேக்கம் அமைந்துள்ளது. இந்த அணையின் மூலம் 72 குளங்களின் கீழ் உள்ள பல ஆயிரக்கணக் கான ஏக்கர் விவசாய நிலங்கள் நேரடியாகவும், மறைமுகமாகவும் பாசனம் பெறுகின்றன. இதற்கிடையே, நல்ல மழை பெய்து அணை நிரம்பி இருக்கும் நிலையில், குத்தகைதாரர்கள் மற்றும் மீன்வளத் துறை மூலம் இங்குமீன்கள் வளர்க்கப்பட்டு, அவை குத் தகைதாரர்கள் மூலமாக விற்பனை செய்யப்படுவது வழக்கம். எனினும், நிகழாண்டில், நீதிமன்ற வழக்குஉள்ளிட்டவற்றால், இங்கு மீன்வளர்ப்புக்கான குத்தகை விடப்படவில்லை என கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக சுட்டெரிக்கும் வெயில், மழைஇல்லாதது போன்ற காரணங்களால் அணையின் நீர்மட்டம் நாள் தோறும் குறைந்துகொண்டே வந் தது. 72 அடி உயரம் கொண்ட அணையில் 2 தினங்களுக்கு முன்புநீர்மட்டம் 30 அடியாக இருந்தது. இதில் 10 அடிக்கும் மேல் சேறும், சகதியுமாக இருக்கும் என்பதால், மீதியுள்ள 20 அடி உயரத்திற்கு மட்டுமே தண்ணீர் இருந்தது. என்றாலும், கடையநல்லூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு குடிநீர் விநியோகம் செய்வதற்காக அணையில் இருந்து குறிப்பிட்ட அளவு தண்ணீர்வெள்ளிக்கிழமை வரை திறக்கப் பட்டது. இந்த தண்ணீர் திறப்பு சனிக்கிழமை நிறுத்தப்பட்டது. அணைக்கு நீர்வரத்து முற்றிலும் நின்றுவிட்ட நிலையில், குறைந்த அளவு தண்ணீரில் இருக்கும் ஆயிரக்கணக்கான மீன்கள் சுவாசிக்க வழியின்றி இறந்து மிதக்கின்றன. அணையில் ஆங்காங்கே தேங்கிக்கிடக்கும் தண்ணீரில் உயிரோடு இருக்கும் மீன்களை பொதுமக்கள் சிலர் பிடித்துச் செல்கின்றனர். நெல்லை மாவட்டத்தில் தொடர்ந்து 3 நாட்களாக 103 டிகிரி வெயில்கொளுத்துகிறது. இதனால் மாவட்டத்தில் உள்ள குளம் குட்டைகள் அதிவேகமாக வற்றி வருகின்றன.

;