districts

img

அனைவருக்கும் வீட்டுமனை மற்றும் பட்டா வழங்கிடுக

சேலம், ஜன.8- வீடற்ற ஏழை மக்கள் அனைவருக்கும் வீட்டுமனை மற்றும் பட்டா வழங்க வலியு றுத்தி ஜன.25 ஆம் தேதியன்று முதல் ஜன.30 ஆம் தேதி வரை சேலம் மாவட்டம் முழுவது முள்ள தாலுகா அலுவலகங்கள் முன்பு ஆர்ப் பாட்டம் நடத்துவது என விவசாய தொழிலா ளர் சங்கத்தின் மாவட்ட மாநாட்டில் தீர்மா னம் நிறைவேற்றப்பட்டது. அகில இந்திய விவசாய தொழிலாளர் சங் கத்தின் சேலம் மாவட்ட 6 ஆவது மாநாடு ஞாயிறன்று திருவாகவுண்டனூர் நெடுஞ் சாலை அருகே உள்ள ஜிவிஎன் மண்டபத்தில் நடைபெற்றது. மாவட்ட துணைச்செயலாளர் எம்.சின்னராஜ் சங்கத்தின் கொடியை ஏற்றி வைத்தார். துணைச்செயலாளர் டி.சாமியப் பன் வரவேற்புரையாற்றினார். அஞ்சலி தீர்மா னத்தை துணைத்தலைவர் சி.எஸ்.பழனியப் பன் முன்மொழிந்தார். சங்கத்தின் மாநில துணைத்தலைவர் சி.துரைசாமி மாநாட்டை துவக்கி வைத்து உரையாற்றினார். மாநில துணைச்செயலாளர் வி.மாரியப்பன், சிஐடியு  மாவட்ட துணைச்செயலாளர் ஆர்.வெங்க டபதி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் ஏ.ராமமூர்த்தி ஆகியோர்  மாநாட்டை வாழ்த்தி உரையாற்றினர். இம்மாநாட்டில், தமிழக அரசு விவசாய தொழிலாளர்களுக்கு தனி நல வாரியம் அமைக்க வேண்டும். மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு திட்டம் ஒன்றிய அரசால் தற்போது சிதைக்கப்பட்டு வருகிறது. இத்திட் டத்தின் வேலை நாட்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு மிகவும் குறைந்துள்ளதால், கிராமப்புற ஏழை விவசாய தொழிலாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, கிராமப்புற வேலை உறுதியளிப்பு திட்டத்திற்கு 4 லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து, ஆண் டுக்கு 200 நாட்கள் வேலையும், தினக்கூலி யாக ரூ.600-ம் வழங்க வேண்டும். கிராமப் புற வேலையை அனைவருக்கும் வழங்கு வோம் என கூறிய திமுக அரசு, ஆட்சி பொறுப் பேற்ற ஒன்றரை ஆண்டுகளாக எதுவும் செய் யாத நிலை தொடர்ந்து நீடித்து வருகிறது. ஒரு  ஆண்டிற்கு நூறு கோடி ரூபாய் மட்டும் ஒதுக்கி, 37 ஊராட்சிகளில் மட்டுமே திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

அனைத்து பகுதிகளுக்கும் இத்திட்டத்தை விரிவுபடுத்த வேண்டும். அனைவருக்கும் வீட்டுமனைகள் மற்றும்  வீட்டுமனை பட்டா வழங்க நடவடிக்கை எடுக்க சிறப்பு சட்டம் ஏற்ற வேண்டும். வரும் தமிழக பட்ஜெட்டில் இதுகுறித்த அறிக் கையை தமிழக அரசு வழங்க வேண்டும். 60 வயதிற்கு மேல் இருப்பவர்களுக்கு முதி யோர் ஓய்வூதியம் குறைந்தபட்சம் 3 ஆயிரம் ரூபாய் வழங்க வேண்டும். மேட்டூர் உபரி நீரை அனைவரும் பயன்படுத்தும் வகையில் செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை  உறுதித் திட்டத்தை முறையாக செயல்படுத்த வேண்டும். நகர்ப்புற வேலை உறுதி திட் டத்திற்கு தமிழக அரசு ஆயிரம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செயல்படுத்த வேண்டும்.  மேலும், வீட்டுமனைகள் மற்றும் பட்டா வழங்க வலியுறுத்தி ஜன.25 முதல் 30 ஆம் தேதி  வரை சேலம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகா அலுவலங்கள் முன்பு கண்டன ஆர்ப் பாட்டம் நடத்துவது உள்ளிட்ட தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன. புதிய நிர்வாகிகள் தேர்வு முடிவில், சங்கத்தின் மாநில பொதுச்செய லாளர் வி.அமிர்தலிங்கம் புதிய நிர்வாகி களை அறிமுகம் செய்து வைத்து நிறை வுரையாற்றினார். மாவட்ட தலைவராக ஜி. கணபதி, செயலாளராக எஸ்.கே.சேகர், பொருளாளராக மாரிமுத்து, 4 துணைத்தலை வர்கள், 4 துணைச்செயலாளர்கள் உட்பட 27 பேர் கொண்ட மாவட்டக்குழு தேர்வு செய்யப் பட்டது.