திருப்பூர், அக்.19- லஞ்ச வழக்கில் கைதான மின்வாரிய செயற்பொறியாளருக்கு மூன்றாண்டு கடுங் காவல் தண்டனை விதித்து திருப்பூர் நீதி மன்றம் தீர்ப்பு அளித்துள்ளது. திருப்பூர் மாவட்டம், மடத்துக்குளம் அம்மாபட்டியைச் சேர்ந்தவர் தாமோதரன் (வயது 45). இவர் அப்பகுதியில் உள்ள தென்னை நார் தொழிற்சாலையில் மேலாள ராக வேலை செய்து வந்தார். இவர் வேலை செய்யும் நார் தொழிற்சாலையில் ஏற்கனவே 52 குதிரைத்திறன் மின்சார இணைப்பு இருந் தது. இதை 90 குதிரைத்திறன் அளவு மின் இணைப்பு கேட்டு பெதப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் விண்ணப்பித்தார். இந்த மின் இணைப்பை மாற்றி கொடுப்பதற்கு ரூ.10 ஆயி ரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று அங்கு உதவி செயற்பொறியாளராக பணியாற்றிய சையத் பாபுதீன் (55) கேட்டுள்ளார். இதைத் தொடர்ந்து தாமோதரன் திருப்பூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் அளித் தார். போலீசார் ரசாயனப் பொடி தடவிய ரூபாய் நோட்டுகளை தாமோதரனிடம் கொடுத்து அனுப்பினர். கடந்த 2011 ஏப்ரல் 29 அன்று, பெதப்பம்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் உதவி செயற்பொறியாளர் சையத் பாபுதீனி டம் ரூ.10 ஆயிரத்தை தாமோதரன் கொடுத் தார். அந்த நேரத்தில் ஏற்கனவே அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார் சையத் பாபுதீனை கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர். இதுதொடர்பான வழக்கு விசாரணை திருப்பூர் தலைமை குற்றவியல் நடுவர் நீதி மன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக் கில் வெள்ளியன்று தீர்ப்பு கூறப்பட்டது. லஞ் சம் வாங்கிய குற்றத்துக்காக சையத் பாபுதீ னுக்கு 3 ஆண்டு கடுங்காவல் தண்டனை, ரூ.4 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி செல்லத்துரை தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு தரப்பில் அரசு வழக்கறிஞர் செந்தில் குமார் ஆஜராகி வாதாடினார்.