districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

உதகை மலை ரயில் சேவை 3 நாட்களுக்கு ரத்து

மேட்டுப்பாளையம், டிச.2- மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் சேவை மூன்று நாட்களுக்கு ரத்து செய்யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. கோவை மற்றும் நீலகிரி மவட்டத்தில் கன மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத் துள்ள நிலையில், கனமழை பெய்தால் மேட்டுப்பாளையம் உதகை இடையேயான மலை ரயில் செல்லும் பாதை யில் நிலச்சரிவு ஏற்படக்கூடிய அபாயம் உள்ளதால் பயணி களின் பாதுகாப்பு கருதி 2 ஆம் தேதி முதல் 4 ஆம் தேதி வரை மூன்று நாட்கள் மேட்டுப்பாளையத்தில் இருந்து உதகை செல்லும் மலை ரயில் போக்குவரத்து ரத்து செய் யப்பட்டுள்ளதாக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

காவல் நிலையத்தில் கிடா வெட்டி பூஜை காவல் ஆய்வாளர் பணியிட மாற்றம்

சேலம், டிச.2- ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் கிடா வெட்டி பூஜை செய்யப்பட்ட நிலையில், காவல் ஆய்வாளர் பணியிட மாற் றம் செய்யப்பட்டுள்ளார். சேலம் மாவட்டம், ஏத்தாப்பூர் காவல் நிலையத்தில் அண்மையில், “குற்ற சம்பவங்கள் மற்றும் அசம்பாவிதங்கள் ஏற்படக்கூடாது” என மூடநம்பிக்கையாக அரசுக்கு சொந்த மான இடத்தில் கிடா வெட்டி பூஜை போடப்பட்டது. காவல் நிலையத்திலேயே இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளது குறித்து சமூக ஊடகங்களில் வீடியோ வெளியாகி பர பரப்பை ஏற்படுத்தியது. இது சம்பந்தமாக மாவட்ட காவல்  கண்காணிப்பாளர் தலைமையில் விசாரணை நடைபெற் றது. இதனைத்தொடர்ந்து ஏத்தாப்பூர் காவல் ஆய்வாளர் கும ரனை மாவட்ட ஆயுதப்படைக்கு பணியிட மாற்றம் செய்து  காவல் கண்காணிப்பாளர் கௌதம் கோயல் உத்தரவிட் டுள்ளார்.

பெற்றோர் இல்லாத பேரன்களை காப்பாற்றக்கோரி ஆட்சியரிடம் மனு

ஈரோடு, டிச.2- விபத்தில் பெற்றோர்கள் உயிரிழந்த நிலையில், ஆதர வற்ற நிலையில் உள்ள பேரன்களை காப்பாற்ற ஆட்சியர் உதவ வேண்டும் என மூதாட்டி ஒருவர் மனு அளித்தார். ஈரோடு மாவட்டம், அந்தியூர் வட்டம், செம்புளிச்சாம் பாளையத்தைச் சேர்ந்தவர் பழனியம்மாள் (55). தூய்மைப்  பணியாளரான இவரது கணவர் நாராயணன் (75). இவர் களது இளையமகன் செல்வகணபதி மற்றும் அவரது மனைவி சௌந்தர்யா ஆகியோர் கடந்த மாதம் நடைபெற்ற சாலை  விபத்தில் உயிரிழந்து விட்டனர். அவர்களுக்கு நிவித் (8), வைபவ் வாசு(4) என்ற குழந்தைகள் இருக்கின்றனர். இக் குழந்தைகள் தற்போது தாத்தா, பாட்டி பராமரிப்பில் உள்ள னர். இந்நிலையில் தங்களுக்கு வேறு வருமானமோ, வச தியோ இல்லாத நிலையில் குழந்தைகளை வளர்க்க முதல மைச்சர் நிவாரண நிதியிலிருந்து உதவிகளை பெற்றுத்தர உதவுமாறு மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற குறைதீர் கூட்டத்தில் பழனியம்மாள் குழந்தைகளுடன் மனு அளித்தார்.

கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வு: அமைச்சரிடம் மனு

சேலம், டிச.2- கட்டுமானப் பொருட்களின் விலை உயர்வை குறைக்க நடவடிக்கை எடுக்க  வேண்டும், என வலியுறுத்தி, சுற்றுலாத் துறை அமைச்சர் ரா.ராஜேந்திரனிடம் நெடுஞ்சாலை ஒப்பந்ததாரர்கள் மனு அளித்தனர். இதன்பின் நெடுஞ்சாலை ஒப்பந்த தாரர் கூட்டமைப்பின் சேலம் மாவட்டத் தலைவர் சுப்பிரமணி கூறுகையில், சேலம் மட்டுமின்றி, ஆறு மாவட்டங் களில் குவாரி உரிமையாளர்கள் கட்டு மானப் பணிக்குத் தேவையான கிரஷர், ஜல்லி, எம்.சாண்ட் உள்ளிட்ட பொருட் களின் விலையை திடீரென தன்னிச்சை யாக விலை உயர்த்தியுள்ளனர். இது மிக வும் கண்டிக்கத்தக்கது. இந்த திடீர் விலை உயர்வால் கட்டுமான தொழிலில் ஈடுபட்டு வரும் அனைத்துத் தொழிலா ளர்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். கடந்த ஓராண்டில் மட்டும் மூன்று முறை விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் பணிகள் அனைத்தும் பாதியிலேயே நிற் கின்றன. எவ்வித முன்னறிவிப்பும் இல் லாமல் தன்னிச்சையாக சிண்டிகேட் அமைத்து விலையை ஏற்றியது எங்க ளைப் போன்ற தொழிலாளர்களுக்கு மிகப்பெரிய இழப்பை ஏற்படுத்தியுள் ளது. இதுகுறித்து குவாரி உரிமையா ளர்களிடம் கேட்டதற்கு, எந்தவித உரிய  பதிலும் தெரிவிக்காமல் அலைக்கழிக் கின்றனர். எனவே, இந்த விலை  உயர்வை குறைக்க நடவடிக்கை  எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, அமைச்சர் மற்றும் மாவட்ட ஆட்சி யரிடம் மனு அளிக்கப்பட்டுள்ளது. இல்லையென்றால், ஆறு மாவட்டங்க ளில் உள்ள ஒப்பந்ததாரர்கள் ஒன்றி ணைந்து மிகப்பெரிய அளவில் போராட் டத்தில் ஈடுபடுவோம், என்றார்.

திருப்பூரில் இன்று மழைக்கு வாய்ப்பு

திருப்பூர் டிச.2- திருப்பூரில் புதனன்று மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. பெஞ்சல் புயல் காரணமாக தமிழ் நாட்டின் கடலோர மாவட் டங்களில் கனமழை பெய்து வருகிறது. அதன் தொடர்ச்சியாக  திருப்பூர் மாவட்டத்திலும் கடந்த இரு நாட்களாக சாரல் மழை  பெய்து வருகிறது. ஞாயிறன்று காலை முதல் சாரல் மழை  பெய்து வந்தது. இந்நிலையில், திங்களன்று வானம் மேக  மூட்டத்துடன் காணப்பட்டது. மேலும், புதனன்று மிதமான மழை முதல் கனமழை வரை பெய்வதற்கான வாய்ப்பு உள்ள தாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

கொளத்துப்பாளையம். மூலனூர், கன்னிவாடி பகுதிகளில் மின்தடை

திருப்பூர், டிச.2- மூலனூர், கன்னிவாடி, கொளத்துப்பாளையம் ஆகிய துணை மின் நிலையங்களில் பராமரிப்புப் பணிகள் நடைபெ றவுள்ளதால், செவ்வாயன்று காலை 9 முதல் பிற்பகல் 2 மணி  வரையில் மின் விநியோகம் தடைப்படும் என தெரிவிக்கப் பட்டுள்ளது. மூலனூர் துணை மின் நிலையத்தில் மின்தடைபடும் பகுதிகள்: அக்கரைப்பாளையம், பொன்னிவாடி, சின்னக்காம்பட்டி, போளரை, நொச்சிக்காட்டு வலசு, வெங்கிகல்பட்டி, கருப்பன் வலசு, வடுகபட்டி, லக்கமநாயக்கன்பட்டி, பெரமியம், வெள் ளாவிபுதூர், கிளாங்குண்டல் மற்றும் அதனைச் சார்ந்த பகுதி கள்.  கன்னிவாடி துணை மின் நிலையத்தில் மின்தடைபடும் பகுதிகள்:  மாலமேடு, அரிக்கான்வலசு, ஆய்க்கவுண்டன்பாளை யம், நஞ்சைத்தலையூர், புஞ்சைத்தலையூர், மணலூர், பெரு மாள் வலசு மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள். கொளத்துப்பாளையம் துணை மின் நிலையத்தில் மின்தடைபடும் பகுதிகள்:  உப்புத்துறைப்பாளையம், கொளிஞ்சிவாடி, மீனாட்சி புரம், துலுக்கனூர், ஆச்சியூர், ரெட்டாரவலசு, மணக்கடவு, கரையூர், சாலக்கடை, எலுகாம்வலசு, காளிபாளையம், மேட் டுவலசு, ராமமூர்மத்தி நகர், கொளத்துப்பாளையம், ராமபட்டி ணம், மாரியம்மன் கோயில், அனுமந்தபுரம், சின்னக்கடை வீதி  மற்றும் அதனைச் சார்ந்த பகுதிகள்.

விளை நிலங்களில் சாயக்கழிவுகள்

திருப்பூர், டிச.2- திருப்பூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்க ளில் சாயக்கழிவுகள் மற்றும்  தோல் கழிவுகளை வெளி யேற்றப்படுவதை கண்டித்து  திருப்பூர் மாவட்ட ஆட்சியர்  அலுவலகம் முன்பு திங்க ளன்று ஜனநாயக மக்கள் கழ கம் மற்றும் திராவிட விடுத லைக் கட்சி சார்பில் கண்டன  ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மேலும், இதில், கேன்சர் உட்பட பல்வேறு நோய்க ளில் இருந்து மக்களை காப்பாற்ற விவசாய நிலங்க ளை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என முழக்கமிட்டனர்.

மழைக்கு வீடு இடிந்து தொழிலாளி பலி

மழைக்கு வீடு இடிந்து தொழிலாளி பலி உதகை, டிச.2- உதகையில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக, வீட்டின் மண் சுவர் இடிந்து தொழிலாளி ஒருவர் பரிதாப மாக உயிரிழந்தார்.  நீலகிரி மாவட்டம், உதகை நொண்டிமேடு பகுதியைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (43). இவருடைய மனைவி ராஜேஸ்வரி  (41). ஆறுமுகம் மார்க்கெட்டில் கூலித் தொழிலாளியாக பணி யாற்றி வந்தார். இவர்களுக்கு  ஒரு மகன், மற்றும் மகள் உள்ள னர். மகன் கூலி தொழிலாளியாக பணியாற்றி வருகிறார். மக ளுக்கு திருமணமாகி வெளியூரில் குடும்பத்துடன் உள்ளார்.  ஆறுமுகம் மட்டும் நொண்டிமேட்டில் உள்ள தனது வீட்டில்  தனியாக வசித்து வந்தார்.  இந்நிலையில், உதகையில் கடந்த 2 நாட்களாக பெய்த  தொடர்மழை காரணமாக, சுவரில் ஈரப்பதம் அதிகமாகி, ஞாயி றன்று இரவு மண்சுவர் இடிந்து விழுந்தது. இரவு நேரம் என்பதா லும் இவர் மட்டும் வீட்டில் இருந்ததாலும் இது குறித்து யாருக் கும் தெரியவில்லை. இதைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் காலையில் சென்று பார்த்தபோது சுவர் இடிந்து விழுந்து, அதற்குள் ஆறுமுகம் சிக்கி கிடப்பது தெரியவந்தது. இது குறித்து உடனடியாக காவல் துறையினர் மற்றும் தீய ணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதன்பே ரில் உதகை மத்திய காவல் ஆய்வாளர் முரளிதரன் தலைமை யிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆறுமுகத்தின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உதகை அரசு மருத்து வமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீ சாரும் வருவாய்த்துறையினரும் தொடர்ந்து விசாரணை மேற் கொண்டு வருகின்றனர்.

கனமழைக்கு வீடு இடிந்து தரைமட்டம் நல்வாய்ப்பாக உயிர் தப்பிய மூதாட்டி

தருமபுரி, டிச.2- கனமழையின் காரணமாக ஈரப்பதம் அதிகமாகி மூதாட்டி  ஒருவரின் வீடு தரை மட்டமானது. நல்வாய்ப்பாக மூதாட்டி உயிர் தப்பினார். தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த பி.கொல்லப் பட்டி கிராமத்தில் வசித்து வரும்  மூதாட்டி பெருமா (வயது.80) இவர் தனியாக வசித்து வருகிறார். தொடர்ந்து பெய்து வரும்  கனமழையால் நேற்றிரவு இவரது வீடு இடிந்து விழுந்து தரை மட்டமானது,இதில் நல்வாய்ப்பாக, மூதாட்டி  உயிர் தப்பி னார். ஆனால் தட்டு முட்டு சாமான்கள், உணவு பொருட்கள்,  படுக்கை விரிப்புக்கள் என அனைத்து உடைமைகளும்  முற்றி லும் சேதமடைந்தன.  இது குறித்து வருவாய் துறையினருக்கு அப்பகுதி மக்கள்  தகவல் தெரிவித்தனர். ஆனால் இதுவரை எந்த அதிகாரிக ளும் வந்து பார்க்கவில்லை எனவும், அப்பகுதி மக்கள் தெரி விக்கின்றனர். எனவே மாவட்ட நிர்வாகம்  உரிய நிவார னம் வழங்க வேண்டும் என மூதாட்டி வேண்டுகோள் விடுத்துள் ளார்.

அணைகள் நிலவரம் (திங்கட்கிழமை)

பவானிசாகர் அணை
நீர்மட்டம்: 97/105அடி
நீர்வரத்து:1944கனஅடி
நீர்திறப்பு : நிறுத்தம்
சோலையார் அணை
நீர்மட்டம்:142.59/160அடி
நீர்வரத்து:172.22கனஅடி
நீர்திறப்பு:371.18கனஅடி
பரம்பிக்குளம் அணை
நீர்மட்டம்:68.99/72அடி
நீர்வரத்து:652கனஅடி
நீர்திறப்பு:418கனஅடி    
ஆழியார் அணை
நீர்மட்டம்:114/120அடி
நீர்வரத்து:229கனஅடி
நீர்திறப்பு:624கனஅடி
திருமூர்த்தி அணை 
நீர்மட்டம்:47.56/60அடி 
நீர்வரத்து:451கனஅடி
நீர்திறப்பு:748கனஅடி
அமராவதி அணை
நீர்மட்டம்: 87.67/90அடி
நீர்வரத்து:529கனஅடி
நீர்திறப்பு:663கனஅடி