திருப்பூர், ஜூன் 16– காவிலிபாளையம் முதல் கணியாம்பூண்டி செல்லும் சாலையை, ஆக்கிரமிப்பில் இருந்து மீட்க வேண்டும் என தந்தை பெரியார் திராவிடர் கழகம் வலியுறுத்தியுள்ளது. திருப்பூர் மாநகராட்சி, முதலாவது மண்டலத்திற்குட்பட்ட காவிலிபாளையம் முதல் கணியாம்பூண்டி செல்லும் சாலை மாநகராட்சிக்கு சொந்தமானது. ஆனால், காவிலிப்பாளை யம் ஜிஆர்எஸ் என்ற நிறுவனத்தின் உரிமையாளர் ராம மூர்த்தி என்பவரும், அவரது கம்பெனிக்கு எதிரில் உள்ள இடைத்தரகர் மணி என்பவரும், அந்த சாலையின் குறுக்கே மண்ணைக் கொட்டி, இருசக்கர வாகனங்கள் கூட செல்ல முடி யாதபடி தடுத்து வைத்துள்ளனர். அப்பகுதியில் தேங்கியிருக் கும் சாக்கடை கழிவுநீர் செல்வதற்கும் வழி இல்லை. சாலை யின் குறுக்கே மண், ஜல்லி, முட்களை கொட்டி அடைத்து வைத்துள்ளனர். இதனால் பொதுமக்கள் நடந்து செல்வ தற்கு கூட சிரமப்படுகின்றனர். எனவே, மாநகராட்சி நிர்வாகம் மேற்படி ஆக்கிரமிப்பாளர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுப்பதுடன், அந்த சாலையை மீட்டு பொதுமக்கள் பயன் படுத்த உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழக மாவட்டத் தலைவர் சன்.முத்துக் குமார் வலியுறுத்தியுள்ளார்.