உடுமலை, பிப்.26 - உடுமலையில் இருந்து மூணார் செல்லும் சாலையில் வனத்துறைக் கட்டுப்பாட்டில் உள்ள பகுதியில் சாலைப் பராமரிப்பு வேலைகள் நடை பெற உள்ளதால் 27ஆம் தேதி (இன்று) முதல் தொடர்ச்சியாக 20 நாட்களுக்குப் போக்குவரத்துகளுக்கு கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. உடுமலை - மூணார் மாநில நெடுஞ் சாலையில் மானுப்பட்டி ஊராட்சி எல்லை 9/6 செக்போஸ்ட் வரை குடியி ருப்பு பகுதியாக இருப்பதால் சாலை களை நெடுச்சாலைத் துறையினர் பராம ரித்து வருகின்றனர். இந்நிலையில் 9/6 செக்போஸ்ட் பகு தியில் இருந்து வனத்துறையின் கட்டுப் பாட்டில் இருப்பதால் நெடுச்சா லைத்துறை பராமரிப்பு வேலைகளை செய்ய முடியாமல் உள்ளது. இதனால் இந்த சாலை குண்டும் குழியுமாகவும், ஒற்றை அடி பாதை போல் இருப்ப தால் வாகன ஓட்டிகளும், சுற்றுலாப் பய ணிகளும் பெரிதும் பாதிப்புக்கு உள்ளா னர்கள். இந்த சாலையை உடனடியாக சரி செய்ய வேண்டும் என கோரிக்கை வைத்த நிலையில் பல ஆண்டுகளுக்கு பிறகு சரி செய்யப்படுகிறது. இது குறித்து அதிகாரிகள் தெரிவிக் கையில், சின்னார் வனவிலங்கு பாது காப்பு மையப் பகுதியில் 9/6 சோதனை சாவடி முதல் சின்னார் சோதனை சாவடி வரையுள்ள பகுதிகளில் சாலைப் பராம ரிப்பு வேலைகள் நடைபெற உள்ள தால், 27 ஆம் தேதி (இன்று) முதல் சாலை போக்குவரத்தில் கட்டுப்பாடு ஏற்படுத் தப்பட்டுள்ளது. நான்கு மணி நேரத் துக்கு ஒரு முறை மட்டுமே வாகனங்கள் கடந்து செல்ல அனுமதிக்கப்படும். இரு பது தினம் இந்த பகுதியில் சாலைப் பணி கள் நடைபெறுவதால் அதுவரை இந்த கட்டுப்பாடுகள் தொடரும் என்று அதி காரிகள் அறிவித்துள்ளனர்.