districts

img

மாம்பழம் விலை குறைந்ததால் வியாபாரிகள் வேதனை

பொள்ளாச்சி, மே 18-

பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு மாம்பழம் வரத்து அதிக மாக இருப்பதால், கொரோனா ஊரடங்கால் தேக்கத்தை தவிர்க்க மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்யப் படுவதாக வியாபாரிகள் வேதனை தெரிவித்தனர் கோவை மாவட்டம், பொள்ளாச்சி காந்தி மார்க்கெட்டுக்கு, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் முதல் மே மாதம் இறுதிவரை கேர ளாவின் பல்வேறு மாவட்ட மற்றும் உள்ளூர் பகுதியிலிருந்து மாம்பழம் வரத்து இருக்கும்.அதுபோல், இந்தாண்டு கடந்த ஏப்ரல் மாதம் துவக்கத்தில் இருந்தே மாம்பழம் மற்றும் மாங்கா யின் வரத்து துவங்கியது. குறிப்பாக, கேரள பகுதிகளான மலப் புரம், சாலக்குடி, பெருந்தன் மன்னா உள்ளிட்ட பகுதிகளில் இருந்தும் மாம்பழம் வரத்து வழக்கத்தைவிட அதிகமானது. அவற்றை வியாபாரிகள் குறிப்பிட்ட விலை நிர்ணயித்து வாங்கி சென்றனர்.

இதனால் மொத்த வியாபாரிகளுக்கு ஓரளவு லாபம் கிடைத்தது. ஆனால், இந்த மாதம் துவக்கத்தில் இருந்து கொரோனா பரால் மேலும் அதிகரிப்பால், தொடர்ந்து ஊர டங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதால் மாம்பழம் விற்பனை மந்தமடைய துவங்கியது.கடந்த இரண்டு வாரங்களாக மாம்பழம் வரத்து அதிகமாக இருந்தாலும், போதிய விற்பனை இல்லாமல் தேக்கமடைந்தது. இந்நிலையில்,கடந்த 10ம் தேதி புதிய கட்டுப்பாடுகளுடன் கூடிய முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்ட்துடன், அத்தியாவ சிய பொருட்கள் விற்பனை காலை 6 மணி முதல் 10 மணி வரை என 4 மணி நேரம் மட்டுமே இருந்ததால் மாம்பழம் உள்ளிட்ட அனைத்து பழங்களின் விற்பனை மேலும் குறைய துவங்கி யது. உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து மாம்பழம் வரத்து இருந்தாலும், விற்பனையில்லாமல் அதிகளவு தேக்க மடைகிறது.

இந்த தேக்கத்தை தவிர்க்க செந்தூரம், கிளிமூக்கு, மல்கோவா உள்ளிட்ட பல்வேறு மாம்பழங்கள் மிகவும் குறைந்த விலையாக ரூ. 10 முதல் ரூ.15 வரை மட்டுமே விற் பனை செய்யப்படுகிறது. தற்போது கொரோனா முழு ஊரடங்கால் மிகவும் குறைந்த விலைக்கு விற்பனை செய்வது நஷ்டத்தை ஏற்படுத்துவ தாகவும், மதியம் 12 மணி வரையாவது பழ வகைகள் விற்பனை செய்வதற்கு அதிகாரிகள் அனுமதி வழங்க வேண்டும் என மொத்த பழ வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

;