districts

img

கள்ளச்சாராய கலாச்சாரத்தை தடுத்து நிறுத்தக்கோரி வாலிபர், மாதர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

திருப்பூர், ஜூன் 21- தமிழ்நாட்டில் அதிகரித்து வரும் கள் ளச்சாராய கலாச்சாரத்தை தடுத்து  நிறுத்தக்கோரி வாலிபர் சங்கம், மாதர்  சங்கம் சார்பில் வெள்ளியன்று ஆர்ப் பாட்டம் நடைபெற்றது.  கள்ளக்குறிச்சியில் கடந்த சில தினங் களுக்கு முன்பு கள்ளச்சாராயம் குடித்து  40 க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ள னர். மேலும் பலர் அவசர சிகிச்சையில்  அனுமதிக்கப்பட்டுள்ளனர். கள்ளச்சா ராயத்தால் மட்டும் கடந்த இரண்டு ஆண் டுகளில் 70க்கும் மேற்பட்ட உயிரிழப்பு கள் ஏற்பட்டுள்ளது. எனவே தமிழ கத்தில் அதிகரித்து வரும் இந்த  கள்ளச்சாராய கலாச்சாரத்தை உடன டியாக தடுத்து நிறுத்த வேண்டும். அதற்கு உடந்தையாக செயல்படும் அனைத்து அதிகாரிகளின் மீதும் தக்க  நடவடிக்கை எடுக்க வேண்டும். பாதிக் கப்பட்டவர்களுக்கு உரிய நிவாரணம் சென்றடைவதை அரசு உறுதி செய்ய வேண்டும் என மாதர் சங்கம், வாலிபர்  சங்கம் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்யறுத் தப்பட்டது. இந்திய ஜனநாயக வாலிபர் சங்க  மாவட்ட துணைத்தலைவர் க.சிந்தன்  தலைமையில், குமரன் சிலை முன்பு   நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், வாலிபர்  சங்க மாவட்டச் செயலாளர் செ.மணி கண்டன், தெற்கு நகரச்செயலாளர் டி. நவின் லட்சுமன், மாணவர் சங்க மாவட் டச்செயலாளர் சா.பிரவீன்குமார் ஆகி யோர் கண்டன உரையாற்றினர். மாவட்டப் பொருளாளர் பாலமுரளி மாவட்ட துணைச்செயலாளர் பாலசுப்பி ரமணியம், வடக்கு ஒன்றியச் செயலாளர்  சந்தோஷ் குமார், மாவட்ட செயற்குழு உறுப்பினர் முருகேஷ் உட்பட பலர் பங் கேற்றனர். முடிவில் வடக்கு நகரச் செய லாளர் விவேக் நன்றி கூறினார்.  மாதர் சங்கம் ஆர்ப்பாட்டம் புது பேருந்து நிலையம் அருகே மாதர் சங்க மாவட்ட துணைச் செயலா ளர் பானுமதி தலைமையில் நடைபெற்ற  ஆர்ப்பாட்டத்தில், மாவட்டத் தலைவர்  பவித்ரா தேவி, மாவட்டச் செயலாளர்  சரஸ்வதி, மாநிலக்குழு உறுப்பினர் பானு மதி உட்பட பலர் கலந்து கொண்டனர். மாவட்டக்குழு உறுப்பினர் அம்சவல்லி நன்றி கூறினார்.