districts

img

ரூ.39 ஆயிரம் கோடி கடன் வழங்க இலக்கு திருப்பூர் மாவட்ட ஆட்சியர் தகவல்

திருப்பூர், ஜூன் 29- திருப்பூர் மாவட்டத்தில் 2024-2025 ஆம் ஆண்டிற்கான கடன் திட்ட அறிக் கையை மாவட்ட ஆட்சியர் தா.கிறிஸ்து ராஜ் வெளியிட்டார். இதில் வேளாண்மை துறைக்கு ரூ.16,829 கோடி யும், சிறு வணிகத் துறைக்கு ரூ.21,344 கோடியும் கடன் வழங்க இலக்கு நிர்ண யிக்கப்பட்டுள்ளது. திருப்பூர் மாவட்ட ஆட்சியர் அலுவ லகக் கூட்டரங்கில் வெள்ளியன்று 2024  - 2025 ஆண்டிற்கான கடன் திட்ட அறிக் கையை அவர் வெளியிட்டார். இதுகு றித்து ஆட்சியர் கிறிஸ்துராஜ் தெரிவித்த தாவது, திருப்பூர் மாவட்ட முன்னோடி  வங்கி சார்பில் ஆண்டு தோறும் ஆண் டுக்கடன் திட்டம் வெளியிடப்படுகிறது. அதன்படி இந்த ஆண்டு 2024-25-க்கான  கடன் திட்ட அறிக்கை வெளியிடப்பட் டுள்ளது. திருப்பூர் மாவட்டத்தின் அனைத்து வங்கிகளும் இணைந்து நிர் ணயிக்கப்பட்ட இலக்கை எட்ட வேண் டும். 2024-25ஆம் ஆண்டிற்கான முன்னு ரிமை கடன்களுக்கான மொத்த திட்ட இலக்கு ரூ.39,018 கோடி ஆகும். இதில்  வேளாண்மை துறைக்கு ரூ.16,829 கோடி யும், சிறு வணிகத் துறைக்கு ரூ.21,344  கோடியும், பிற முன்னுரிமை கடன்களுக் கான வீட்டுக் கடன், மரபுசாரா எரிசக்திக்  கடன், கல்விக் கடன்களுக்கான ரூ.396. 02 கோடியும் இலக்கு நிர்ணயிக்கப்பட் டுள்ளது. கல்விக் கடனுக்காக சிறப்பு  முகாம்கள் நடத்தி விண்ணப்பங்களை  பரிசீலினை செய்து மாணவர்களுக்கு  உடனடியாக கல்விக்கடன் வழங்க நடவ டிக்கை எடுக்குமாறும் வங்கிகளுக்கு மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தி உள் ளார்.  மேலும், வேளாண் உட்கட்டமைப்பு  நிதி திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு கடன் வழங்கவும் ஆட்சியர் அறிவு றுத்தினார். இந்நிகழ்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் த.ப.ஜெய் பீம், மாவட்ட முன்னோடி வங்கி மேலா ளர் துர்கா பிரசாந்த், முதன்மை மேலா ளர் பாலாஜி ஆகியோர் உடனிருந்த னர்.

;