districts

img

தோட்டங்களுக்குள் புகுந்த மழை வெள்ளம்: வாழைகள் சேதம்

மேட்டுபாளையம், டிச.9- கனமழையால் தடுப்பணை  நிரம்பி  விவசாய தோட்டங்களுக்குள்  புகுந்த மழை வெள்ளத்தால், இரண் டாயிரத்திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள் சேதமடைந்தது. கோவை மாவட்டம், மேட்டுப் பாளையம் அடுத்துள்ள சிறுமுகை திம்மனூர் பகுதியில் 60 ஏக்கர் பரப் பளவு கொண்ட குளம் உள்ளது. இந்த குளம் வெள்ளியன்று இரவு பெய்த  கன மழையால் முழுவதுமாக நிரம்பி யது. அதிகபடியாக வெள்ளம் வந்த தன் காரணமாக அதன் உபரிநீர் அங் குள்ள தடுப்பணை வழியாக வெளி யேறியது. ஆனால் அதிக வெள்ளப் பெருக்கு காரணமாக தண்ணீர் வெளி யேறி அருகில் உள்ள வாசுதே வன், கோபாலகிருஷ்ணன் ஆகிய  இருவரது விவசாய தோட்டத்தை சூழ்ந்தது. இதனால் இரண்டாயிரத் திற்கும் மேற்பட்ட வாழை மரங்கள்  தண்ணீரில் மூழ்கி சேதமடைந்தது.  குளம் மற்றும் தடுப்பணையிரிருந்து தண்ணீர் வெளியேறி வருவதால் தாழ் வான பகுதியில் இருக்கும்  மக்க ளுக்கு ஊராட்சி நிர்வாகம் சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதேபோன்று, மேட்டுப்பாளை யம் சுற்றுவட்டார பகுதிகளில் பல  இடங்களில் தரைப்பாலங்கள் மற் றும் சாலைகள் சேதமடைந்தும் துண் டிக்கப்பட்டும் காணப்படுகிறது. சாலைகளில் மழை வெள்ளம் பெருக் கெடுத்து ஓடி வருகிறது. சிறுமுகை நகரத்தில் இருந்து வையாளி பாளையம், அண்ணதாசன்பாளை யம், பசூர், காரனூர், அக்கரை செங் கப்பள்ளி, புளியம்பட்டி பகுதிக ளுக்கு  செல்லக்கூடிய சாலையில் மழை வெள்ளம் பெருக்கெடுத்து ஓடு வதால் அச்சாலை உள்ள பகுதியே ஆறு போல் காட்சியளிக்கிறது.  கோவை நகரப்பகுதியில் வெள் ளியன்று இரவு முழுவதும் பெய்த கன மழையால், மேம்பால பகுதியில்  மழை நீர் சூழ்ந்தது. அவிநாசி சாலை  மேம்பாலம் பகுதியில் முழுமையாக மழை நீர் சூழ்ந்ததால், குளம் போல் தேங்கியது. இதனையடுத்து, மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநக ராட்சி ஆணையர் நேரில் சென்று மழைநீரை வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகளை துரிதப்படுத்தி னர்.