districts

img

ஏற்காட்டில் மகளிர் காவல் நிலையம் அமைத்திடுக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி போராட்டம்

 சேலம், மே 2- ஏற்காட்டில் மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கை களை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஒண்டிக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஏழைகளின் ஊட்டி என அழைக்கப்படும் ஏற்காடு 67 மலை குக்கிராமங்களை கொண் டுள்ளது. இங்கு மலைப்பகுதியில் பெண்கள்  மற்றும் பெண் குழந்தைகள் மீதான பாலியல்  குற்றங்கள் அதிகரித்து வருகிறது. ஆனால் விசாரிக்க மகளிர் காவல் நிலையம் இல்லாத  சூழல் உள்ளது, எனவே ஏற்காடு பகுதியில்  மகளிர் காவல் நிலையம் அமைக்க வேண்டும். இதேபோன்று, அரசு கலைக் கல்லூரி மற்றும் அரசு பாலிடெக்னிக் கல்லூரி  அமைக்க வேண்டும், கொரோனா காலத்தில்  நிறுத்தப்பட்ட பேருந்துகளை அனைத்து வழித்தடத்திலும் செயல்படுத்த வேண்டும், அரங்கம் முதல் கொட்டச்செடு வரை ஆறாம்  எண் ஃபீல்டு சாலை அமைக்க வேண்டும்  உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம்  நடைபெற்றது. ஏற்காடு ஒன்றிய செயலாளர் நேரு தலைமையில் நடைபெற்ற ஆர்ப் பாட்டத்தில், கட்சி மாவட்ட செயலாளர் மேவை.சண்முகராஜா, மாவட்ட செயற் குழு உறுப்பினர் எம்.குணசேகரன், ஏற்காடு  தாலுகா குழு உறுப்பினர்கள் உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.