ஈரோடு, ஆக. 6- அருந்ததியர் உள் ஒதுக்கீடு நீடிக்க சட்டப்போராட்டம் நடத்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மற் றும் தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியினருக்கு அந்தியூரில் செவ்வாயன்று வெற்றிக் கொண் டாட்டம் நடைபெற்றது. அடுக்கப்பட்ட மூட்டைகளில் அடி மூட்டைகளாய் அழுந்திக்கிடக் கும் அருந்ததிய மக்களுக்கு, பட்டி யலினப் பிரிவில் தனி உள் இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என மார்க்சிஸ்ட் கட்சி தொடர்ந்து போராடி வந்தது. இதன்தொடர்ச்சி யாக, அனைத்து தலித் அமைப்பு களையும், மார்க்சிஸ்ட் கட்சி திரட்டி சென்னையில் பல்லாயிரக்கணக் கானோர் பங்கேற்ற மாபெரும் கோரிக்கை பேரணியை நடத்தியது. இக்கோரிக்கை நாளுக்குநாள் வலுப்பெற்றதை அறிந்த, அன் றைய முதல்வர் கலைஞர், அருந்த திய மக்களுக்கு உள் இடஒதுக் கீட்டை வழங்க முடிவெடுத்தார். இதனைத்தொடர்ந்து ஒரு குழு அமைத்து, 2009-ஆம் ஆண்டில் மாநிலத்தில் பட்டியலினப் பிரிவி னருக்கான 18 சதவிகித இடஒதுக் கீட்டில் அருந்ததியருக்கு 3 சதவிகித உள் இடஒதுக்கீட்டை வழங்கியது. இதனை எதிர்த்து சிலர் நீதிமன்றம் சென்றதை எதிர்த்து, மார்க்சிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக் குழு உறுப்பினராக உள்ள ஜி.ராம கிருஷ்ணன், மத்தியக்குழு உறுப்பி னர் பி.சம்பத் உள்ளிட்டோரும் வழக் கில் இணைந்தனர். வழக்கின் விசா ரணை முடிவில், அருந்ததிய மக்க ளுக்கு வழங்கப்பட்ட உள் இட ஒதுக் கீடு செல்லும் என்று உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ளது. இந்நிலையில், உள் இட ஒதுக் கீடு கிடைக்க அடித்தளமிட்ட மறைந்த மார்க்சிஸ்ட் கட்சியின் முன் னாள் மாநிலச் செயலாளர் தோழர் என்.வரதராஜனை நினைவு கூர்ந் தும், கோரிக்கை நிறைவேற களப் போராட்டத்தில் ஈடுபட்டு மற்றும் சட் டப்போராட்டம் நடத்திய சிபிஎம், தீண்டாமை ஒழிப்பு முன்னணி, தலித் அமைப்புகளுக்கும் நன்றி தெரிவித்தும், வெற்றி கொண்டாட்ட நிகழ்வு அந்தியூரில் நடைபெற்றது. இந்த நிகழ்விற்கு சிபிஎம் அந்தி யூர் தாலுகாச் செயலாளர் ஆர்.முருகேசன் தலைமை ஏற்றார். தமிழ் நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி மாவட்டத் தலைவர் பி.பி.பழனிச் சாமி, சிபிஎம் பவானி தாலுகாச் செயலாளர் எஸ்.மாணிக்கம், மாவட்டக்குழு உறுப்பினர்கள் எஸ்.வி.மாரிமுத்து, ஏ.ஜெகநாதன், தீண்டாமை ஒழிப்பு முன்னணி அந்தியூர் தாலுகாச் செயலாளர் ஏ.கே.பழனிச்சாமி, பவானி தாலு காச் செயலாளர் ஆர்.பிரகாஷ், அந்தியூர் தாலுகாத் தலைவர் ஏ. முருகன் ஆகியோர் உரையாற்றி னர். நிறைவாக சிபிஎம் தாலுகாக் கமிட்டி உறுப்பினர் எஸ்.செபாஸ்டி யன் நன்றி கூறினார்.