தருமபுரி, பிப்.25- பென்னாகரம் கடை வீதியில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை, போலீசாரிடம் ஒப்படைத்த பத்தி ரிக்கையாளருக்கு, பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் பகுதி யில் நிருபராக பணியாற்றி வரும் தர்மராஜா என்பவர், செவ்வாயன்று பென்னாகரம் கடை வீதியில், சாலையோரத்தில் கிடந்த ரூ.50 ஆயிரத்தை கண்டெடுத்துள்ளார். இதுகு றித்து பென்னாகரம் பத்திரிகையாளர் மன்றத் திற்கு தகவல் தெரிவித்துள்ளார். அதனைத் தொடர்ந்து பென்னாகரம் பத்திரிகையாளர் மன்றத்தின் தலைவர் ஜீவானந்தம், செயலா ளர் சிவக்குமார், பொருளாளர் குபேந்தின் ஆகியோருடன் சென்று, ரூ.50 ஆயிரத்தை பென்னாகரம் துணை காவல் கண்காணிப்பா ளர் மகாலட்சுமியிடம் பத்திரிகையாளர் தர்ம ராஜா ஒப்படைத்தார். அதனைத்தொடர்ந்து, போலீசார், கடைவீதியில் விசாரணை மேற் கொண்டதில், பென்னாகரம் அருகே உள்ள மாங்கரை பகுதியைச் சேர்ந்த அருண்குமார் (27) என்பவர், வங்கியில் நகை அடமானம் வைத்து, பணத்தைப் பெற்றுச் செல்லும் போது தவறவிட்டது தெரிய வந்தது. அத னைத்தொடர்ந்து அவரிடம் போலீசார் பணத்தை ஒப்படைத்தனர். கடைவீதியில் கிடந்த பணத்தை, காவல்துறையிடம் ஒப்ப டைத்த பத்திரிக்கையாளர் தர்மராஜாவிற்கு போலீசார் மற்றும் பலரும் பாராட்டுக்களை தெரிவித்தனர்.