districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

வகுப்பறையில் தேங்கிய மழைநீரை வெளியேற்றும் தலைமை ஆசிரியர்!

நாமக்கல், டிச.13- ராசிபுரம் அருகே பள்ளி வகுப்பறையில் தேங்கிய மழை நீரை, தலைமை ஆசிரியர் வெளியேற்றும் காட்சிகள் இணை யத்தில் வைரலாகி வருகிறது. நாமக்கல் மாவட்டம், ராசிபுரத்தை அடுத்த கோனேரிப் பட்டி அருகே உள்ள மேட்டுக்காடு பகுதியில் ஊராட்சி ஒன்றிய  தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில் ஏராளமான குழந்தைகள் கல்வி படித்து வருகின்றனர். ராசி புரம் உட்பட மாவட்டத்தில் பல்வேறு பகுதியில் கடந்த இரண்டு  தினங்களாக அதிகாலை முதல் மழை பெய்து வருகிறது. இந்நிலையில், அந்த பள்ளியில் படிக்கும் குழந்தைகள் வியா ழனன்று வழக்கம் போல் பள்ளிக்கு சென்றனர். அப்போது தொடர்ந்து பெய்து வரும் மழையால் வகுப்பறை முழு வதும் மழைநீர் தேங்கியது. மேலும், பள்ளி வகுப்பறை கட்டி டத்தில் கசிவு ஏற்பட்டு மழை நீர் ஒழுங்கியதால் குழந்தைகள், ஆசிரியர்கள் பள்ளி வகுப்பறை வெளியே மழையில் நனைந்த படி காத்திருந்தனர். இதனையடுத்து வகுப்பறையில் தேங் கிய மழைநீரை பள்ளி தலைமை ஆசிரியர் வெளியேற்றும் பணியில் ஈடுபட்டார். தொடர்ந்து அருகே உள்ள நூலக கட் டிடத்தில் குழந்தைகளை தங்க வைத்து ஆசிரியர்கள் பாடங் களை நடத்தினர். தற்போது, வகுப்பறையில் தேங்கிய  மழைநீரை பள்ளி தலைமை ஆசிரியர் அப்புறப்படுத்தும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. மழைக் காலம் தீவிரமடைந்துள்ள நிலையில், அரசுப்பள்ளிகளில் மழைநீர் தேங்காதவாறு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க  வேண்டும், என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஆட்சியர் அலுவலகப் பொருட்கள் ஜப்தி

ஆட்சியர் அலுவலகப் பொருட்கள் ஜப்தி சேலம், டிச.13- சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு நிலம் கொடுத்த 17 குடும்பங்களுக்கு உரிய இழப்பீடுத் தொகை வழங்காததால், ஆட்சியர் அலுவலகப் பொருட்களை நீதி மன்ற அமீனாக்கள் ஜப்தி செய்யததால் பரபரப்பு ஏற்பட் டது. சேலம் - கரூர் அகல ரயில் பாதை திட்டத்திற்கு, அமானி  கொண்டலாம்பட்டி பகுதியில் நிலம் கையகப்படுத்தப்பட்டது. அப்பகுதியைச் சேர்ந்த கருமலை, வெங்கடேஷ் உள்ளிட்ட 17 குடும்பங்களிடமிருந்து ஆறு ஏக்கர் நிலம் கடந்த 2002 ஆம்  ஆண்டு கையகப்படுத்தப்பட்டது. இந்த நிலத்திற்கு இழப் பீடு தொகை வழங்கப்படும் என நிர்வாகம் தரப்பில் அறிவிப்பும் வெளியிடப்பட்டது.  ஆனால், இழப்பீடுத் தொகை வழங்கா ததால் பாதிக்கப்பட்டவர்கள் சேலம் இரண்டாவது கூடுதல் மாவட்ட நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்தனர். இந்த  வழக்கை விசாரணை மேற்கொண்ட நீதிபதி, கையகப்படுத் தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை தற்போது  உள்ள மதிப்பீட்டில் வழங்க நீதிபதி உத்தரவு பிறப்பித்தார். ஆனால், உத்தரவு பிறப்பித்து 22 வருடம் ஆகியும் இழப்பீடுத் தொகை வழங்கவில்லை. இதனையடுத்து, ஆட்சியர் அலுவ லகப் பொருட்களை ஜப்தி செய்ய நீதிபதி உத்தரவிட்டார். இந்நிலையில், நீதிமன்ற அமீனாக்கள் வியாழனன்று ஆட்சியர் அலுவலகத்திலுள்ள பொருட்களை ஜப்தி செய்ய வந்தனர். அப்போது, இழப்பீடுத் தொகை குறித்து உயர் அதி காரிகளிடம் தெரிவித்து உரிய தொகை வழங்கப்படும் என அதி காரிகள் தெரிவித்தனர். அதற்கு நீதிமன்ற உத்தரவின்படி ஜப்தி செய்யப்படும் எனக்கூறி, அலுவலகத்திலிருந்த பீரோ, நாற்காலி, மேஜை, கணினி உள்ளிட்ட அலுவலகத்தில் உள்ள  தளவாடப் பொருட்கள் அனைத்தையும் ஜப்தி செய்தனர்.

சாலை விபத்தில் 2 பேர் உயிரிழப்பு

நாமக்கல், டிச.13- ஓசூரிலிருந்து பூ பாரம் ஏற்றி வந்த மினி ஆட்டோ, லாரி மீது மோதியதில் 2 பேர் உயிரி ழந்த சம்பவம் குறித்து காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூரிலிருந்து பூக்கள் பாரம் ஏற்றிக்கொண்டு, மினி ஆட்டோ  ஒன்று திண்டுக்கல் நோக்கிச் சென்று கொண் டிருந்தது. இந்நிலையில், நாமக்கல், பாப்ப நாயக்கன்பட்டி ரெயின்போ தாபா எதிரில் சேலம் - நாமக்கல் சாலையில் வெள்ளியன்று  அதிவேகமாக வந்த ஆட்டோ, முன்னால் சென்று கொண்டிருந்த லாரி மீது மோதி  விபத்துக்குள்ளானது. இதில் ஆட்டோவிலி ருந்த திண்டுக்கல் மாவட்டம், சிலுக்குவார் பட்டியைச் சேர்ந்த நாகராஜ் (25), தொப்பி னாயக்கம்பட்டியைச் சேர்ந்த விக்னேஷ் (25) ஆகிய இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். மேலும், ஆட்டோவை ஓட்டி வந்த சக்திவேல் (28), படுகாயங்களுடன் நாமக்கல் அரசு மருத்துவக்கல்லூரி மருத் துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு மதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து தகவல றிந்து சம்பவ இடத்திற்கு வந்த நல்லிபாளை யம் காவல் துறையினர், இறந்தவர்களின் உடல்களை பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். தொடர்ந்து, இச்சம்ப வம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசா ரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உடுமலை புத்தகத் திருவிழாவில்  நூல் வெளியீடு

உடுமலை, டிச.13-  உடுமலை புத்தகத் திருவிழாவில் நடராசனின் படிப்பு ஒன்றே வாழ்வின் பாதையை திறக்கும் என்ற நூல் வெளியிடப் பட்டது. உடுமலையில் 10 ஆவது புத்தகத் திருவிழா டிச.7 ஆம் தேதி  தொடங்கி 16 ஆம் தேதி வரை உடுமலை தேஜஸ் மஹா லில் நடைபெற்று வருகிறது. இந்த புத்தகத் திருவிழாவில் தின மும் மாலையில் கலை நிகழ்ச்சிகள் மற்றும் கருத்தரங்கம் நடை பெற்று வருகிறது. அதன் ஒரு பகுதியாக, செவ்வாயன்று நடை பெற்ற   நிகழ்ச்சிக்கு சிக்கண்ணா அரசு கலைக் கல்லூரி முதல் வர் வ.கிருஷ்ணன் தலைமை ஏற்று ஓய்வு பெற்ற வட்டாட்சி யர் நடராசனின் “படிப்பு ஒன்றே வாழ்வின் பாதையை திறக்கும்” என்ற நூலை வெளியிட்டார்.  தோழர் ராசா நூலை  அறிமுகப்படுத்தினார். கோவை கவிஞர் சுடர் விழி “என்னை புரட்டிய புத்தகங் கள்” என்ற தலைப்பில் கருத்துரை வழங்கினார். கதை  சொல்லி  பூங்கொடி பாலமுருகன் “ஜீபூம்பா” என்ற தலைப்பில் கதை கள் படிப்பதும் கேட்பதும், வாசிப்பின் அவசியம் குறித்தும்  சிறார் கதை மூலம் கருத்துரை வழங்கினார்.

டிச.20 கோட்ட அளவிலான விவசாயிகள் குறைதீர் கூட்டம்

திருப்பூர், டிச.13- திருப்பூர் வருவாய் கோட்டத்தில் கோட்ட அளவிலான விவசாயிகள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் வரும் டிச.20 ஆம்  தேதி காலை 11 மணிக்கு திருப்பூர் வருவாய் கோட்டாட்சியர்  அலுவலகத்தில் நடைபெற உள்ளது. வருவாய் கோட்டாட் சியர் தலைமையில் நடைபெறும் இக்கூட்டத்தில், விவசாயி கள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு பயன்பெறு மாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய பாமக நிர்வாகி மீது வழக்குப்பதிவு

பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய பாமக நிர்வாகி மீது வழக்குப்பதிவு கோவை, டிச.13- சைபர் கிரைம் பெண் உதவி ஆய்வாளரை மிரட்டிய பாமக நிர்வாகி மீது கோவை பந்தய சாலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். கோவை கணபதி புதூரை சேர்ந்தவர் அசோக் ஸ்ரீநிதி (35). பாமக நிர்வாகி. இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவை  மாநகர சைபர் கிரைம் போலீஸ் நிலையத்தில் புகார் அளித் தார். அதில் யூ-டுயூப் சேனல் மூலம் ஒருவர் தனக்கு கொலை  மிரட்டல் விடுக்கிறார். அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண் டும் என தெரிவித்திருந்தார். அதன்படி போலீசார் வழக்குப் பதிவு செய்து கடலூர் மாவட்டத்தை சேர்ந்த முகமது இப்ரா ஹிம் என்பவரை போலீசார் கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். இதனை தொடர்ந்து வியாழனன்று கோவை மாநகர சைபர் கிரைம் அலுவலகத்துக்கு வந்த அசோக் ஸ்ரீநிதி, அங்கிருந்த பெண் உதவி ஆய்வாளர் சுகன்யாவிடம் முகமது இப்ராஹிம் மீது ஏன் கொலை முயற்சி வழக்குப்பதிவு செய்யாமல் ஜாமீ னில் விடுவிக்கப்பட்டார் என கேட்டு வாக்குவாதம் செய்தார். பின்னர் அவர் அந்த வழக்கின் சில ஆவணங்களை கிழித்து  எறிந்ததாக கூறப்படுகிறது. மேலும் பெண் உதவி ஆய்வா ளரை தகாத வார்த்தைகளால் பேசியும் கொலை மிரட்டல் விடுத்ததாக தெரிகிறது. இது குறித்து சுகன்யா பந்தயசாலை காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீ சார் அரசு ஊழியரை பணி செய்ய விடாமல் தடுத்தல், கொலை மிரட்டல் உள்ளிட்ட பிரிவுகளில் கீழ் பாமக நிர்வாகி அசோக் ஸ்ரீநிதி மீது வழக்குப்பதிவு செய்து விசாரித்து வரு கின்றனர்.

தேயிலைக் கழிவு லாரி பிடிபட்டது

தேயிலைக் கழிவு லாரி பிடிபட்டது கோவை, டிச.13- மேற்குவங்க மாநிலத்திலிருந்து தேயிலை கழிவை கொண்டு வந்த கன்டெய்னர் லாரியை வெள்ளியன்று அதிகாரி கள் பிடித்தனர். வடமாநிலங்களில் இருந்து கோவை உள்ளிட்ட மேற்கு  மாவட்ட பகுதிகளுக்கு தேயிலைக் கழிவுகள் கொண்டு வரப்படு கிறது. இதனை தரமான தேயிலைத் தூளுடன், தேயிலை கழிவு களை கலந்து கலப்பட தேயிலை தயாரிக்கப்பட்டு அவை  விற்பனை செய்யப்படுவதாக புகார் எழுந்தது. இந்நிலையில் மேற்கு வங்க மாநிலத்திலிருந்து கோவைக்கு கண்டெய்னர் லாரியில் கொண்டுவரப்பட்ட ரூ.10 லட்சம் மதிப்புடைய 13,600 கிலோ எடையிலான தேயிலைக் கழிவுகளை துடியலூர் அருகே, தேயிலை வாரிய குன்னூர் மண்டல அதிகாரிகள் மடக்கி பிடித்தனர். பின்னர் அதை துடியலூர் அருகில் இருக் கக்கூடிய குடோனுக்கு கொண்டு சென்று கண்டெயினரை திறந்து அந்த தேயிலைக் கழிவுகளை இறக்கி பரிசோதித்த னர். அப்பொழுது அவை தரம் குறைந்த தேயிலைக் கழிவுகள் என்பது தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து தேயிலைக் கழிவு களை குழி தோண்டி, அவற்றுடன் பிளீச்சிங் பவுடர் மற்றும் சுண்ணாம்பு போன்றவற்றை கலந்து பூமியில் புதைத்தனர். மேலும், இந்த தேயிலைக் கழிவுகளை வாங்கிய நபரின் விவரங்களையும், தேயிலைக் கழிவுகள் எங்கிருந்து வாங்கப் பட்டது என்பது குறித்த விளக்கத்தையும் தேயிலை வாரியத்தி டம் வழங்க வேண்டும். இதுவரை கொள்முதல் மற்றும் விநியோ கம் செய்த தேயிலை மற்றும் தேயிலைக் கழிவுகள் தொடர் பான ஆவணங்களையும் தேயிலை வாரியத்திடம் சமர்ப்பிக்க  வேண்டும் என அதிகாரிகள் அறிவுறுத்தியுள்ளனர்.