districts

img

தாய்மடி விட்டுப் பிரிந்த பிள்ளைகளின் வருகை

தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலை ஞர்கள் சங்கத்தின் கோவை தோழர்கள் ஏற்பாடு செய்திருந்த முதல் தொல்லியல் பய ணம். தொல்லியல் ஆர்வலர்களும் கல்லூரி மாணவ மாணவியர்களுமாக 50 பேர் கலந்து கொள்ளும் இந்த நிகழ்வில் முதல் பயணமாக வேலந்தாவளம் சாலையில், கேரள எல்லை  அருகே அமைந்துள்ள குமிட்டிபதி எனும் சிற்றூ ருக்குச் செல்ல முடிவாகியிருந்தது. முகநூலில் பார்த்த பயணம் குறித்த அறி விப்பினை நேற்றிரவே மனைவியிடம் தெரி வித்திருந்தேன். இன்னும் இரண்டு தினங்க ளுக்குப்பின் வரும் விநாயகர் சதுர்த்திக்கான பதட்டம் என் மனைவியின் விருப்பத்தை இல் லாமல் செய்துவிட்டது. பண்டிகைகள் கொண் டாட்டமானது என்பதெல்லாம் ஒருவகையில் ஆண் மனக்கூற்றாகவே இருக்கமுடியும். பண் டிகைகள் பெண்களுக்கு சுமையானவையே என்கிற சிந்தனையினூடாகவே கோவை சென் றேன். வெகுநாள் விருப்பமாக என்னுள் இருந்த இவ்விடம் இப்பயணம் குறித்த அறிவிப்பு  வெளியானதும் சட்டென துளிர்த்து வேர்விடத் தொடங்கியது. பயணத்தின் கடைசி நபராக சேர்த்துக் கொள்ளப்பட்ட நான் இதுவரை அறி முகமில்லாத புதிய நண்பர்களைக் காண ஆவ லோடு காத்திருந்தேன். தோள்பை சகிதமாக  வந்த ஒரு இளைஞர் ஒரு பெயர் பட்டியலை  எடுத்ததும் சுற்றியிருந்த நபர்கள் ஒவ்வொருவ ராக அவரிடம் குழுமத் தொடங்கினர். அதிலொ ருவர் தன் தோழியரிடம் என்னை சுட்டிப் பேசி யதும் நான் அவர்களை நெருங்கினேன். மிகையான சந்தோசத்தை முகத்திலோ பேச்சிலோ காண்பிக்கத் தெரியாத காரணத் தால் மிகுந்த உற்சாக மனநிலையில் இருந்த கல்லூரி மாணவ, மாணவியர்களுக்கு வழி விட்டு பேருந்தில் பின்னிருக்கையை தேர்வு செய்து அமர்ந்தேன். ஏனோ தெரியவில்லை கல்லூரி மாணவ, மாணவியர் குழாமும் பின் னிருக்கைகளில் வந்து அமர்ந்து கொண்டனர்.  என்னோடு பேராசிரியர் சிலரும் இளைஞர் களும் உடனிருந்தனர். வண்டி கிளம்பிய சிறிது நேரத்தில் “ சார், வாந்தி வர்ற மாதிரி இருக்கு”  என்று விளையாட்டாய் குரல் உயர்த்தினான் ஒரு மாணவன். உடனே மாணவிகள் “ கங்கி ராட்ஸ், கங்கிராட்ஸ்” என்று கூக்குரலிட்டு எக்க ளித்து சிரித்தனர். நாம் புரிந்து சிரிப்பதற்குள் அவர்கள் அடுத்த உரையாடலுக்கு தாவியி ருந்தனர். இப்படியே பேருந்து கிளம்பி அரிசிபாளை யம் அருகே தேநீர் அருந்த நிற்கும் வரை கல் லூரி மாணவியர்களின் கலகலப்பான தன்னி யல்பான பேச்சு இரசிக்கும்படி இருந்தது. ஆனால் இவர்களை வெறும் விளையாட்டுப் பிள்ளைகள் என்று எண்ணிவிடாதபடி அவர் களின் உரையாடல் கடவுளின் இருப்பு, மறுப்பு என விவாதமாக மாறி பின்னிருக்கை எங்கும்  சுற்றி சுழன்றடித்தது. சில நேரங்களில் உரை யாடல் சேமிப்பு, பங்கு பரிவர்த்தனை என ஆழ மாகவும் நடைபெற்றுக் கொண்டிருந்ததை கவ னிக்காமல் இருக்க முடியவில்லை. தன்னை சூழ்ந்து இருப்பவர்களை அவர்கள் முழுவது மாக நம்பியிருப்பதால் அவர்களின் பேச்சும்  மனதில் இருந்து வெடிப்புற அமைந்திருப்ப தாக உணர முடிந்தது.

பயணத்தினூடாக தொலைதூரத்தில் ஒரு மலையொன்று தென்பட்டது. இந்த மலைக்கு  சென்றால் ஆகாதா? என்று எண்ணி முடிப்ப தற்குள் அந்த மலையடிவாரத்திலேயே பேருந்து வந்து நின்றது. தென்னைமரங்களும் பசும்  சமவெளிகளுமாக சூழந்திருந்த அவ்வெளி யில் குடியிருப்புகள் மட்டும் தென்படவில்லை. பதிமலை என்றழைக்கபடுகிற அவ்விடத்தில் இருந்து முருகன் கோயிலுக்கு செல்வதற்கான படிகட்டுகள் துவங்குகின்றன. எங்களை அழைத்து வந்திருந்த கிரிஷ் கோபிநாத் கோயிலின் இடதுபுறமிருந்த காட்டுத்தடம் நோக்கி கைகாட்டினார். எல்லோரும் அவர்  காட்டிய திசையில் பாதை மாறி நடக்கத் தொடங்கினோம். இடதுபுறம் திரும்புபவர்கள் எப்போதும் வெகுசிலர்தான் என்று எண்ணி சோர்ந்திருந்த காட்டுமலர்கள் இத்தனை இளைஞர்களை பார்த்ததும் அவசர அவசர மாக தனக்கு ஒப்பனை செய்து கொண்டு மலர்ந்து சிரித்தது. குத்தீட்டிகளாய் மாறி  இருந்த புற்கள் கொஞ்சம் இளகி நெகிழ் வாக்கிக் கொண்டது.  மரங்களையும் புதர்களையும் கடந்து நுழைந்ததும் மலையின் பேருருவம் தன்னை முழுமையாய் காட்டியபடி ஆகாயம் வரை வியாபித்து நின்றிருந்தது. மலையின் பாதம் பற்றி சில தப்படிகள் நடந்ததும் அம்மலைத் தாயின் கருப்பையைப் போல குகையொன்று வாய் திறந்து நின்றிருந்தது. தக்க பருவம் வந்த தும் கூட்டுடைத்து பட்டாம்பூச்சிகள் வெளியேறி விடும். இது புரியாத கூடுகள் அதன் வருகைக் காக வாய்திறந்து காத்திருப்பது போல அக் குகையில் தோற்றம் எனக்குள் அமர்ந்து கொண் டது. மூன்றாயிரம், நான்காயிரம் வருடங்க ளுக்கு முன்பிருந்த நம் மூதாதையர்களைத் தாங்கி மழை, குளிர் படாது இளஞ்சூடு அளித்து பராமரித்த மலையின் மடிப்புகளிலும் சரிவு களிலும் அலைபாய்ந்த மனிதர்கள் இன்னும் நிறம் மங்காது காட்சியளிக்கும் பல்வேறு கால கட்ட பாறை ஓவியங்கள் முன்னே நிலைகுத்தி நின்றனர். தனது கைபேசியில் காலம் கடந்த வர லாற்றை சிறை பிடித்துக் கொண்டனர். 

குகையின் முன்புறப் பரப்பில் அமர வைத்து பாறை ஓவியங்களில் உள்ளடங்கியுள்ள மனி தர்களின் கதையை விளக்க தலைப்பட்டனர் ஆய்வாளர்கள். இனக்குழு வாழ்க்கை நடை முறையில் இருந்த காலத்தில் மனிதர்கள் நாடோ டிகளாக உணவு சேகரித்தல் மற்றும் வேட்டை யாடுதலின் பொருட்டு இடம் விட்டு இடம் நகர்ந்து வாழத் தொடங்கினர். அத்தகைய குழுவினர்கள் தம்மை பாதுகாத்துக் கொள்ள இப்படியான மலைப்பகுதி குகைகளை சார்ந் திருந்தனர். அவர்கள் தேர்வுசெய்த குகை களின் எதிர்புறம் விரிந்த சமவெளியாகவும் எதிர்வரும் விலங்கினங்களையும் ஆபத்து களையும் முன்னுணர்ந்து கொள்ள வாய்ப்பாக வும் உள்ள குகைகளை தேர்வு செய்துள்ளனர். மனிதன் தன் உணர்ச்சியை வெளிப்படுத்தவும் பிறரோடு உரையாடவும் எழுத்துக்கள் பிறக் காத காலத்தில் ஓவியங்களை கைகொண்டி ருந்திருக்கிறான்.  “சோழநாடு சோறுடைத்து என்பதுபோல சேரநாடு வேலமுடைத்து” என்பது முதுமொழி. மேற்குத் தொடர்ச்சி மலை சூழ்ந்த இவ்வன மெங்கும் ஒருகாலத்தில் லட்சத்திற்கும் மேலான யானைகள் புழங்கியிருக்கின்றன. ஒரே இடத்தை இரு உயிரினங்கள் பகிர்ந்து கொள்ள நேர்ந்தபோது மனிதர்கள் யானைகளை அடக்கி ஆளப் பழகிக் கொண்டனர், என்கிறார் சூழலியாளர் கோவை சதாசிவம். இங்குள்ள ஓவியத்தில் யானையின் கோபத்தை உணர்த்த வால் மேல்நோக்கி நிமிர்ந்திருக்கும்படி வரையப்பட்டுள்ளது. யானையின் பிரமாண் டத்தை உணர்த்த அதன் பாதம் பெரியதாக வரையப்பட்டுள்ளது. இந்த மலைப்பகுதியை அடுத்த வேலந்தாவளம் என்கிற சிற்றூர் அமைந்திருக்கிறது. வேலம் என்பது யானை யையும் தாவளம் என்பது சந்தையையும் குறிப்பதாக உள்ளதால் இவ்வூரின் பெயரும்  பாறை ஓவியத்தின் கூற்றுக்கு சான்றளிப்பதாக உள்ளது.

மேலும் இங்குள்ள ஓவியத்தில் யானை யின் மீதமர்ந்திருக்கும் மனிதன் கையில் சிறு வாள் ஒன்று வைத்திருப்பதை வைத்து இவ் வோவியம் இரும்புக்காலத்தை சார்ந்தது என  வரையறுக்கலாம். இது தவிர்த்து பாறை ஓவி யங்களை நவீன அறிவியல் முறைகளில் காலப் பகுப்பாய்வு செய்ய இயலாது. யானை ஓவி யத்தை அடுத்து வெவ்வேறு காலகட்டங்களில் வரையப்பட்ட ஓவியங்களும் அன்றைய இனக் குழு மக்களின் வாழ்வியல் முறைகளை உணர்த் துவதாக உள்ளது. மக்களின் கூட்டு வாழ்க் கையை, வேட்டையாடும் மரபை சுட்டுவதாக இங்குள்ள ஓவியங்களை ஆய்வாளர்கள் கருதுகின்றனர். அனைவரும் குழுவாக புகைப்படம் எடுத் துத் திரும்பும்போது அம்மலையெங்கும் கரு மேகம் சூழ்ந்து வானம் கீழ் இறங்கியிருந்தது. நானும் ஈரக்காற்றின் மகிழ்ச்சிக்கு தன் உடல் சிலிர்த்து ஆடிக்கொண்டிருந்த அம்மலையின் சிறுகுளத்தில் என் மனதைக் கொஞ்சம் மிச்சம் வைத்துவிட்டுத் திரும்பினேன்.

-க.சம்பத்குமார்